செவ்வாய், 5 டிசம்பர், 2017

திருமாவளவன்: ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது மதிமுகவும் பாமகவும்தான்! முழுக்க முழுக்க சுயநலம்!



ஈழத்தமிழர்களுக்காக எந்த போராட்டத்தை அதிமுக செய்தது? 2009 தேர்தலில் அதிமுக திமுக இல்லாமல் தனி அணியாக நிற்போம் என்று மதிமுகவுக்கும் பாமகவும் கோரிக்கை விடுத்தேன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஒரு தனி அணியாக நிற்போம் என்று வேண்டி கொண்டேன் , ஆனால் என்ன காரணத்தால் அதிமுக பக்கம் போய் நின்றார்கள்?
முழுக்க முழுக்க சுயநலம்தான் ..அதிமுக பக்கம் போன ஒரே காரணம் திமுக மீது பழி போடவேண்டும் என்பதை தவிர வேறு எந்த நோக்கம்மும் அவர்களுக்கு இருக்கவில்லை.
இதுவரை காலமும் தோழமை கருதி மௌனமாக இருந்தேன் , இப்போது நேரிடையாக குற்றம் சாட்டுகிறேன் . ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது மதிமுகவும் பாமகாவும்தான் .
செஞ்சோலை குண்டு வீச்சுக்கு கண்டித்து ஒரு அறிக்கையாவது விடுமாறு நான் கெஞ்சி கேட்ட பிறகுதான் ஒரே ஒரு அறிக்கையை மட்டும் அதுவும் ஒரே ஒரு தினசரியில் மட்டும் வெளியிட்டார் ஜெயலலிதா. அவருக்கு தாயுள்ளம் இருந்திருந்தால் தானாகவே கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருப்பார் செல்வி ஜெயலலிதா..
அப்படி ஒரு ஈவு இரக்கம் அற்ற நிலையிலே ஈழப்பிரச்சனயை  அணுக கூடியவர்தான் ஜெயலலிதா . அவரோடு கூட்டணி வைத்தால்தான் தலைவர் அவர்களும் சுபவீ அவர்களும் ஆசிரியர் வீரமணி அவர்களும் இனத்துக்கு நல்லது செய்கிறவர்கள் என்றால் அது என்ன அளவுகோல் என்றுதான் எமக்கு புரியவில்லை.

நான் இந்த இடத்திலே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன், வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறேன்.தோழமையின் அடிப்படையிலே அமைதி காத்த நான் இப்போது கூறுகிறேன், ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்து பாமகவும் மதிமுக்கவும்தான் என்பதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 
ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான் அக்கறை இருந்திருக்குமே ஆனால் நான் விடுத்த வேண்டுகோளை அவரகள் ஏற்றுருக்கவேண்டும்.
என்ன காரணத்தால் அதிமுக பக்கம் போய் நின்றார்கள்?
அதிமுக எப்படி ஈழத்தமிழர்களை பாதுகாத்து விடும் ?
அதிமுக இதுவரை ஈழத்தமிழர்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறது? முழுக்க முழுக்க சுயநலம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக