செவ்வாய், 5 டிசம்பர், 2017

குமரிமாவட்ட மீனவர்கள் அதிச்சி தகவல்கள் .... மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்துக்கு ஒத்திகையா?

Arul Ezhilan : மீனவர் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பிணங்கள் ஆட்சி செய்யும் போது குடிமக்களை பிணங்களாகவே மீட்க முடியும். அதைத்தான் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கேரள கரையோரம் ஒதுங்கும் மீனவர்கள் சடலங்களும், கடலில் மிதக்கும் மீனவர் சடலங்களையும் மீட்டு கேரள மெடிக்கல் கல்லூரியில் வைத்திருக்கும் புகைப்படங்கள் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது. அவைகளை காணச்சகியவில்லை.
மீனவர்களை உயிருடன் தான் மீட்க முடியவில்லை. பிணத்தையாவது பெற்றுக் கொடுங்கள் பழனிசாமி. நிலமை அபாகரமானதாக இருக்கிறது. 244 போட்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பவில்லை. கேரள அரசு கொஞ்சம் பேரை மீட்டிருக்கிறது.
இப்போது பலருடைய சடலங்கள் சிதைந்த நிலையில் கரையொதுங்கியிருக்கும் நிலையில் தமிழக அரசு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது. வன்முறையை தூண்டுகிறது.


தமிழக அரசு விரைந்து செயல்பட்டிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் தேடுவதாக பச்சை பொய்யை மீண்டும் மீண்டும் கூறி மக்களை ஏமாற்றி விட்டார்கள். இப்போது பிணங்கள் அடையாளம் காண முடியாத அளவு சிதைந்து கரை ஒதுங்கிறது. அந்த புகைப்படங்களை தலைமைச் செயலகத்தின் முன்னால் பெரிய போஸ்டர்களாக ஒட்ட வேண்டியிருக்கும் “உங்கள் ஆட்சியில் மீனவர் நிலை இதுதான்” என ஒட்டும் சூழல் உருவாகும் எச்சரிக்கை...!

300 மீனவர்களை காணவில்லை:ஊடகங்களை கொஞ்சம் குமரி கடலோரங்கள் பக்கம் திருப்புங்கள்..
“ஓகி புயல் பாதிப்பு பற்றி நேற்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற ஐ,.ஏ.எஸ் தேவசகாயம் “மீனவர்கள் அவர்களை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” “அவர்களுக்கே தெரியும்” என்பது போன்ற கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். தனக்கு தெரிந்த விஷயங்களை பேசுவதை விட்டு தனக்கு தெரியாத விஷயங்கள் பற்றி எதையாவது உளறும் உரிமையை இவரைப் போன்றவர்களுக்கு யார் கொடுத்தார்கள்?
நியூஸ் 18 தவிற வேறு சானல்கள் எதுவும் உருப்படியாக மீனவர் துயரங்களை பதிவு செய்யவில்லை. கேரளத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்களை காணவில்லை. கேரள அரசு மிக துரிதமாக பேரிடர் அவசர நிலை பிரகடனம் செய்து விமானங்கள், கடலோர காவல்படை மூலம் தேடுதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை மீட்டிருக்கிறார்கள்.இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மூன்று நாளாகியும் இன்னும் கரை திரும்பவில்லை. இந்த நிமிடம் வரை கோஸ்ட் கார்டோ, நேவியோ கடலுக்குள் இறங்கவில்லை. சிலர் கடலிலேயே இறந்து விட்டதை உயிர் தப்பி வந்தவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
தூத்தூர் , சின்னதுறை போன்ற பகுதிகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றவர்களின் கதி தெரியவில்லை. மீனவர்கள் மீட்க சொன்னால் அரசு அங்க அடையாளம் கேட்கிறதாம். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. குமரி மாவட்டத்தில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்ல வில்லை என்பதால் அம்மக்களை பழிவாங்குகிறதா அதிமுக அரசு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக