செவ்வாய், 5 டிசம்பர், 2017

முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் அரசுக்கு கோர்ட் அனுமதி


தினமலர் : வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றார். பின்னர் அமெரிக்காவில் நிகழும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 6 முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். .இதனை எதிர்த்து கீழ் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை எதிர்த்து டிரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. டிரம்ப்க்கு வெற்றி உச்ச நீதிமன்றம், டிரம்ப் அரசின் உத்தரவை அமல்படுத்த அனுமதித்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அக்டோபர் மாதம் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியது. இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதில் பெரும்பான்மை நீதிபதிகள் டிரம்ப் உத்தரவுக்கு அனுமதி வழங்கினர். இந்த தீர்ப்பு டிரம்ப் அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக