புதன், 6 டிசம்பர், 2017

நடிகர் விஷாலின் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது .. ஆர் கே நகர் இடைதேர்தல் வேட்பு மனு இறுதியாக நிராகரிப்பு !

  ajalakshmi - Oneindia Tamil சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் திடீர் திருப்பமாக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார். தேர்தல் ஆணையத்துடனான ஆலோசனைக்குப் பின்னர் தேர்தல் அதிகாரி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதால் அதன் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்மொழிந்தவர்களின் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஷால் தன்னுடைய மனுவை ஏற்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் முன்மொழிந்தவர்கள் அதிமுக வேட்பாளர் மதுசூதனனால் மிரட்டப்பட்டதாக ஒரு ஆடியோவையும் விஷால் வெளியிட்டார். 
 இதனை தேர்தல் அதிகாரியிடமும் அவர் அளித்தார். அடுத்த 5வது நிமிடத்தில் வெளியே வந்த நடிகர் விஷால் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றார். நாளை முதல் களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். இதையே தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் மறியலில் ஈடுபட்டனர். 
 
இந்நிலையில் 11 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விஷாலின் மனுவை முன்மொழிந்த 10 பேரில் 2 பேரின் கையெழுத்து போலியாக உள்ளதால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். EC rejects vishal nomination வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மனு ஏற்கப்பட்டதாக அறிவித்து பின்னர் ஏன் நிராகரித்தார்கள் என தெரியவில்லை; சுயேட்சை ஒருவரை ஆதரித்து வெற்றி பெற வைப்பேன் என கூறியுள்ளார்
://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக