புதன், 6 டிசம்பர், 2017

மணமேடையிலேயே உயிரிழந்தது மாப்பிள்ளை!!-(வீடியோ) மணமகள் கழுத்தில் மாலை அணிவிக்கும் போது..


மணமேடையில் மணமகள் கழுத்தில் மாலை அணிவிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. வரீந்தர் கேதா என்பவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் பெயர் சவுரவ் கேதா (28). இவர் செல்போன் மற்றும் ஸ்டேசினரி கடை நடத்தி வந்தார். சவுரவுக்கும், ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த நிகழ்வு நடைபெற்றது. அப்போது மணபெண் சவுரவ் கழுத்தில் மாலை அணிவித்தார். இதையடுத்து சவுரவ் தனது வருங்கால மனைவி கழுத்தில் மாலை போட முயன்ற போது மேடையிலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சவுரவை எழுப்ப முயற்சித்தும் அது முடியாததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சவுரவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். ஆனாலும் இதை நம்பாத சவுரவின் பெற்றோர் வேறு மருத்துவமனைக்கு மகனை தூக்கி செல்ல அங்கும் அவர் இறந்து போனது உறுதி செய்யப்பட்டது. மணமேடையிலேயே மாப்பிள்ளை உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக