சனி, 2 டிசம்பர், 2017

புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது .. நெல்லை ... இது ஒரு ஊழல் பாலம்?

நடு இரவில் கைது செய்து Kalaignar Karunanidhi யை சார்ஜ் சீட் கூட போட முடியாத கோபாலபுரம் பாலம் வழக்கில் ஜெயலலிதா செய்தாரே .. இப்போது பாலம் இடிந்தே விட்டது இதில் யாரை கைது செய்ய வேண்டும் ..அந்த துறையை அப்போது மாறி மாறி வைத்து இருந்த #OPS #EPS இருவரையும் ஆட்சி மாறியவுடன் புதிய அரசு கைது செய்ய வேண்டும் என்றால் சரியா .
தீக்கதிர் :நெல்லை அருகே திருக்குறுங்குடி ஆற்றுப்பாலம் வெள்ளத்தால் உடைந்தது. நெல்லையில், கொடுமுடியாறு அணை நிரம்பியதால் அதிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், நம்பியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தளவாய்புரம், ஆவரந்தலை கிராமங்களை இணைக்கும் திருக்குறுங்குடி ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டே ஆகிய நிலையில், பாலம் உடைந்தது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் உடைந்ததால் திருக்குறுங்குடியில் இருந்து ஆவரந்தலை, கட்டளை, வன்னியன்குடியிருப்பு மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர்களுக்குச் செல்ல சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக