திங்கள், 11 டிசம்பர், 2017

இந்தியாவுக்கே மாநில சுயாட்சியை கற்றுதந்த தமிழகம் ... டயர் நக்கிகளின் காலில் ..

Sivasankaran Saravanan : கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என பணி செய்தவர்கள் தற்போது திமுகவுடன் ஒரே மேடையில் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை உணர்ந்துகொண்டால், " ஓ அப்ப தனியா போனவங்க இப்ப ஒண்ணு சேர்ந்தா உடனே எல்லாம் மாறிடுமா! " எனக் கேட்கத் தோன்றாது.
ஜெயலலிதா இறந்தபிறகு திமுக வை பார்த்து ஏன் இந்த ஆட்சியை கலைக்கவில்லை என்று பலரும் கேட்டார்கள். ஏன் திமுகவால் அதை செய்ய முடியவில்லை என கிண்டல் கூட செய்தார்கள். அப்படி கேட்டவர்களில் பலரும் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வரவேண்டும் என விரும்பியவர்கள் அல்லர்! இவ்வளவு ஏன் அதிமுக வின் தொண்டர்களில் பலரே கூட நெருக்கமானவர்களிடம் பேசும்போது, "இவ்ளோ சீர் கெட்டு பேர் கெட்டு சிக்கி சீரழியறதுக்கு இந்த ஆட்சி போய்த் தொலைஞ்சா பரவாயில்லை! " என புலம்புகிறார்கள். அதிமுக கட்சிக்காரனே இந்த ஆட்சி போய்த்தொலைந்தால் சரிதான் என எண்ணுகிறார்! காரணம் என்ன?
திமுக வை பேர் வாங்கவிடாமல் தடுப்பதற்காவது அதிமுக வேலை செய்யும். ஆனால் இப்போது எருமை மாடு மீது மழை பெய்தது போல எதற்குமே அசராமல் ஆட்சி பதவி ஒன்று மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்கள். சரி ஆட்சி முக்கியம் என்று இருந்தாலாவது பரவாயில்லை அதுவொன்றும் தவறில்லை. நமக்கு பிடிக்கிறதோ பிடிக்கலையோ தமிழக மக்கள் வாக்களித்தார்கள், அதற்கு நியாயமாக சுயமாக ஆட்சி செய்தால் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் தமிழக மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத பாஜகவின் கைப்பாவையாக மாறி அடிமை சேவகம் புரிவது தான் நமக்கு கவலை தரக்கூடியது, நாட்டுக்கே மாநில சுயாட்சியை கற்றுத்தந்த தமிழகத்தின் உரிமையை விட்டுத்தருகிற அவலநிலை தான் நமது பிரச்சனை!
இந்த சூழ்நிலையிலும் கூட ஒருத்தர் இந்த ஆட்சிக்கு முட்டு கொடுப்பார் என்றால் அவருக்கு கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லை என்று தான் சொல்லவேண்டும்!
இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்றால் அதற்குரிய வலிமை தமிழகத்தில் திமுகவிடம் மட்டுமே இருக்கிறது! ஏனென்றால் அமைப்பு ரீதியாக அதிமுக தமிழகம் முழுதும் காலூன்றியுள்ள கட்சி. அதை அமைப்பு ரீதியாக தமிழகம் தோறும் காலூன்றியுள்ள திமுக துணையோடு தான் எதிர்கொள்ளமுடியும்! எனவே திமுகவை நோக்கித்தான் அணி சேர முடியும்!
எனவே அப்படி அணி சேர்கிறவர்களை பார்த்து அப்ப இல்ல இப்ப ஏன் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அரசியல் பார்வையாக ஒருபோதும் கருதக்கூடாது! நபர் சார்ந்தா பிரச்சினை சார்ந்தா என்றால் பிரச்சினை சார்ந்தே (Issue based) எதையும் அணுகவேண்டும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக