திங்கள், 11 டிசம்பர், 2017

குமரி மீனவர்கள் .... எதிரி காலை பிடிப்பதைவிட கழுத்தை பிடிப்பதுதான் நல்லது.

Anbe Selva : 4 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு அறிவிச்சப்ப அந்த மக்கள் ஒரு வேலைதான் பண்ணாங்க, இந்திய அரசு அலறியடிச்சு வேலை செஞ்சது, பொதுவா ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவார்கள், கண்டனம் தெரிவிக்க ப்படும், போராட்டம் நடக்கும். அமைதியாகிவிடும், ஆனா இந்த பிரச்சினைக்கு மட்டும் இந்திய அப்படி செயல்பட்டது, காரணம் ராமேஸ்வரம் வரும் ரயில் பாதையை தகர்த்து விட்டார்கள், வடஇந்திய பார்ப்பனர்கள் புனித பயணத்துக்கு தடை விழுந்தவுடன் அப்படி ஒரு வேகமாக செயல்பட்டது இந்திய அரசு.
எதிரி காலை பிடிப்பதைவிட கழுத்தை பிடிப்பதுதான் நல்லது.
இப்போ 12 நாட்கள் 1000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிர் போராட்டம் என்றாலும் இந்த அரசு கண்டுகொள்ளாது, ராமேஸ்வரம் பார்முலாவிற்கு குமாரி மக்களுக்கும் வாய்ப்பிருக்கிறது,
விவேகானந்தர் பாறை, இந்தியா இமயம் முதல் குமரி வரை இது பார்ப்பனர்களின் பாரதமாதா என்ற குறியீட்டுக்குக்காக எழுப்பப்பட்டது. அதைவிட உயரமாக அங்கே திருவள்ளுவரை கலைஞர் நிறுவியதெல்லாம் திராவிட அரசியலின் தெளிவு, இருக்கட்டும்.
விவேகானந்தர் பாறை முற்றுகையிடப்பட்டால் பார்ப்பனிய அரசு பதறும், மீனவர்களின் அழுகுரல்களுக்கு சூரியனுக்கு உளுந்துவடை படைக்கும் மெல்லியவர்கள் செவி மடுக்க இது ஒன்றுதான் வழி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக