செவ்வாய், 21 நவம்பர், 2017

வைரமுத்துவின் நரேந்திர மோடி வாழ்த்து

நேற்று மோடியின் அவர்களின் கவிதையை வெளியிட்டு திராவிட தன்னகற்ற புலவர் வைரமுத்து ஆற்றிய உரை!!
எழுத்தின் கழுத்துக்கு தாமரை தண்டை போல , இந்திய தேசத்தின் கழுத்துக்கு நல் குருத்தாயிருக்கும் பிரதமர் மோடி அவர்களின் கவிதை தொகுப்பை பெற்றுக்கொள்வதில் பெரும் உவகை அடைகிறேன் இந்த வைகை நகர கவிஞன்.
ஆலிலையில் படுத்துக்கொண்டே அண்டம் ஆண்டான் அந்த ஆண்டான், இவரோ தேயிலையில் வாழ்க்கை தொடங்கி அரசியலில் தேயா நிலை அடைந்த ஒரு பெரும் தலைவன்.
பல ராத்திரிகள் யோசித்திருக்கிறேன் இந்த
குஜராத் திரித்த தலைவனை.
என் மனப் பஞ்சத்தில் எனக்கு கிடைத்த ஒரு அட்சயப் பாத்திரம் மோடி.
மனிதனை மதிக்காமல் இருப்பது விந்தையில்லை ஆனால் மனிதன் மதிக்கும் பணத்தை மதிப்பிழக்காமல் செய்த ஒரு இந்தியத் தந்தை,
ஆயிரமும் ஐநூறும் தேயுற்றுக் கிடக்க , அதுக்கு நீருற்று வேரிட்டு வேறிடம் போகச் செய்த ஒரு தேர் வடம் இவர்.
தாகம் தீர்க்க வரும் மேகமாக செய்தல் வேண்டுமென்ற நிலையில் மோகத்துடன் யாகத்துடன் தியாகத்துடன் தன்னை நிறுத்திக்கொண்டு , நிலவா இருந்த இவர் கட்சியை நிலைப் பெறச்செய்த ஒரு ஆதவன்.
திராவிட ஆதவனுக்கும் வேதனை தருகின்ற ஒரு போதகன்.
அற்புத வரிகளில் இந்த கவிதை தொகுப்பில் என் கண் பட்டாலும், இவரின் சிறந்த வரி என்பது ஜிஎஸ்டி வரி தான் என்பதை அச்சடிப்பட்ட இந்த புத்தக வரிகள் கூட மெச்சிடுமே.

பறக்கும் பறவைகளின் இறக்கைக்கு சவால் விடும் பரபரப்பானவன். பிறப்பால் இவன் பார்ப்பரனே அல்ல, ஆனாலும் பார்ப்பணனே, பலர் தன்னை வியந்து பார்க்கும் நிலையில் இருக்கும் ஒரு அரண், பார்ப்பரன்.
நம்மிடையே உலாவுகின்ற உலக நாயகனையே கலக நாயகனா பரிமாணிக்கச் செய்யும் காவியுடை காவியன்.
இவர் கவிதை படித்தேன், அனைத்தும்
பல படி தேன்.
எழுத்துக்களுக்கு வீரம் வந்திருப்பதாலோ, அவையும், பலரை போல , இவர் முன்பு முறுக்கிட்டுக்கொண்டிருக்கிறது,
கிறுக்கர்களே , இவன் முன்பு செருக்கர்களெல்லாம் கருகப்போவது திண்ணம்,
இதை ஒரிடமும் விடாது ஒவ்வொரு இடமும் அறிந்து நடைபெறப்போவது என்பதை திராவிடமும் அறியும்.
இதோ முதல் திராவிடக் கவிஞனின் மனம் கலைப்பால், எழுத்தை படித்த மலைப்பால் , தேசத்தின் முக்கிய தலைப் பால் , இவருக்கு என் முதல் தமிழ் முலைப்பால் கொடுத்து
வலிமையடைய வாழ்த்துக்கிறேன்.
நரேந்திர மோடி.. நரேந்திரனே நீ பெற்றதெல்லாம் நல் திறனே
இவரின் கவிதைகள் தமிழில் வெளியிட்டதை போல, எனது கவிதை தொகுப்பையும் , முந்திக்கொண்டு , இந்தியின் முந்திக்குள் முழுதுமாய் பொருத்த ஆசைப்படுகிறேன்.
கில்லி அடிக்க கற்றுத் தந்த தமிழகத்தை விட்டு டில்லி அடிக்க புறப்படும் நாள் புலர்ந்ததை ,
வேரின சூரியத் தலைவனை ஒரினமாக்க , நீ தூவின பூ மழையில் நனைந்த ஒரு மலர்காம்பாக , ரசித்து மகிழ்ந்த இந்த வையிர வைர முத்து ,
இதழ் திறந்து உன் வரவுக்கு ஒரு முதலிடுகின்றேன்.
வணக்கம். வாழ்க நரேந்திர மோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக