திங்கள், 20 நவம்பர், 2017

கேடுகெட்ட ஆட்சி.. இனி தமிழக அரசுப்பணிகளில் தமிழே தெரியாமலும் சேரலாம்

Sowmian Vaidyanathan: தமிழகத்தில் நடபெறும் எடப்பாடியின் பினாமி அரசு.... ஏதோ ஊழல் செய்கிறது, நிர்வாகமே சரியில்லை, புது திட்டங்கள் எதுவுமே இல்லை, மந்திரிகள் எல்லாம் மங்குனிகளாகவே இருக்கின்றார்கள், அரசாங்கம் என்ற ஒன்றே நடைபெறாமல் இருக்கின்றது....
இப்படியாக சென்று கொண்டிருக்கின்ற காரணத்தாலேயே தான், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழகத்தில் பெரும்பாலோனோர்கள் பேசிக்கொண்டும், அங்கலாய்த்துக்கொண்டும் இருக்கின்றார்கள்..!
ஆனால் இவையெல்லாம் ஒரு காரணமே இல்லை... இதைவிட அபாயகரமான ஒரு ஆபத்து இந்த கேடுகெட்ட ஆட்சியாளர்களால் தமிழகத்திற்கு வந்திருக்கின்றது... அதன் காரணமாக இந்த அரசு உடனடியாக அவசரகதியில் வேரும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டே ஆக வேண்டிய கட்டாயம் வந்திருப்பதை, தமிழகத்தின் வாசிகள் அனைவரும் உணர்ந்து..., சாதி, மத, கட்சி பேதம் கடந்து அனைவரும் வீதிக்கு வந்து இதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயம் வந்திருக்கின்றது...!
டி என் பி எஸ் ஸி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை ஒன்றின் மூலம் இனி தமிழக அரசுப்பணிகளில் தமிழே தெரியாத மக்கள் யாராக இருந்தாலும் இந்தியா முழுவதிலுமிருந்து அப்ளை செய்து தமிழக அரசுப்பணிகளில் சேரலாம் என்கிறது அந்த அறிவிக்கை.
இதனால் ஏற்படப்போகும் ஆபத்துக்கான விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. அப்படி இந்த அறிவிக்கையினால் தமிழக தமிழர்களுக்கு ஏற்படவிருக்கும் வேலையிழப்பினை புரிந்து கொள்ளாத மக்களாகத்தான் இன்றைய தமிழக இளைஞர்கள் இருப்பார்களேயானால்.... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று சொல்லிவிட்டு கடந்து போவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தான் நினைக்கின்றேன்.

தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் எப்படியாவது வேலையில் சேர்ந்து விட்டு அப்பறமா, ரெண்டு வருஷம் கழிச்சி தமிழ் கத்துக்கிட்டா போதுமாம்..! தமிழன் தமிழகத்தை ஆள்வது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்குனு சொல்ற சீமானும் அவன் குஞ்சுகளும் நாக்கை புடுங்கிக்கிட்டு சாவுங்கடா..!
திராவிட முன்னேற்ற கழகம் மட்டும் தான் இந்த பெரிய ஆபத்திலிருந்து தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்ற முடியும். செயல் தலைவர் தளபதியார் அவர்கள் இதை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டார்... ஆட்சியாளர்கள் தவிர்த்து மற்ற அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழமே ஸ்தம்பிக்கும் மாபெரும் போராட்டத்தை திமுக தலைமையில் அவர் முன்னெடுப்பார். அதற்கு ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களும் ஒத்துழைப்பு நல்கி வீதிக்கு வந்து போராடி கைவிட்டுப் போகும் உரிமையை மீட்டெடுத்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும்..!
இவனுங்க ஆட்சியில இருக்குறதுக்கு எந்த கேவலத்தை வேணாலும் செய்வானுங்க போலருக்கு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக