புதன், 29 நவம்பர், 2017

கூர்க்காலாந்து தனிநாடு போராட்டம் ! ஊடகங்களால் மறைக்கப்படும் அதிர்ச்சி தகவல்கள்

கூர்க்காலாந்து கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகநாடுகளால் கவனிக்க படுகிறது, அளவில் சிறிய பிரதேசமாக இருந்தாலும் நேபாளம், திபெத், சீனா ,பங்களாதேஷ் போன்ற நாடுகளை எல்லையாக கொண்டிருக்கிறது  கூர்க்காலாந்து பிரதேசம்.   இதன் இழப்பு என்பது  இந்தியாவுக்கு அது ஒருபோதும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே  இருக்கும் .அந்தமக்களின்நியாயமான கோரிக்கைகளை காலனித்துவ ஆதிக்க மனோ நிலையில் புறக்கணிக்கும் டெல்லி அரசும்  மம்தா அரசும் மாபெரும் வரலாற்று தவறை இழைக்கின்றன. 

New Delhi: The Supreme Court on Monday permitted the Centre to withdraw four of the eight companies of Central Armed Paramilitary Forces (CAPF) from strife-torn Darjeeling and Kalimpong districts of West Bengal for deployment in poll-bound Gujarat. Darjeeling. Representational image. PTI A bench of Chief Justice Dipak Misra and Justices AM Khanwilkar and DY Chandrachud agreed to the Centre's plea to relocate half of the remaining paramilitary forces from the state's strife-torn districts to the poll-bound state. The apex court had earlier on 27 October permitted the Centre to withdraw seven of the 15 companies of CAPF from Darjeeling and Kalimpong districts for deployment along the borders of Jammu and Kashmir and in the north-eastern states and to the poll-bound states of Gujarat and Himachal Pradesh. The Calcutta High Court had earlier stayed the withdrawal of CAPF from Darjeeling hills, the scene of unrest over the statehood demand, till 27 October after the state government approached it opposing the Centre's decision.  www.firstpost.com/india/gorkhaland-agitation-sc-allo
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் பகுதியைப் பிரித்து, கூர்காலாந்து தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி, 104 நாட்களாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராடங்களின்போது நடைபெற்ற மோதல்களில் பலர் கொல்லப்பட்டனர். மேற்குவங்க முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அறிவித்திருந்த போராட்டக்குழு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்ததை ஏற்று, போராட்டத்தை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து, கூர்கா ஜன்முக்தி மோட்சா தலைவர் பிமல் குருங்க், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டார்ஜிலிங் பகுதிக்கு வரும் பாரதிய ஜனதா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், தங்கள் கோரிக்கைக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட மேற்குவங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


டார்ஜிலிங் பகுதிக்கு இன்று வரும் பாரதிய ஜனதா குழுவிற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என பிமல் குருங்க் கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டத்தின்போது, கூர்கா ஜன்முக்தி மோட்சா தொண்டர்கள் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக பாரதிய ஜனதா குழுவினரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மற்ற குழுவினரும், பாரதிய ஜனதா பிரதிநிதிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திரு. திலீப் கோஷ் தலைமையில், பாரதிய ஜனதா பிரதிநிதிகள் இன்று டார்ஜிலிங் வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.jayanews.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக