புதன், 29 நவம்பர், 2017

தினகரன் RK நகரில் போட்டியிட சசிகலா தடை? சசியோடு தினகரன் ஆலோசனை !

மாலைமலர் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார் தினகரன்.ஆலோசனையில், "கட்சியும் சின்னமும் எடப்பாடி தரப்புக்கு கிடைத்தது நமக்கு பின்னடைவுதான். அதேசமயம், தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக வாக்குகள் பிரிந்து திமுக வெற்றிபெற வைத்துவிடும். இரட்டை இலையை நாம் தோற்கடித்தாக குற்றம் சாட்டுவார்கள். அதனால், தேர்தலை புறக்கணிக்கலாம்" என சிலர் வாதிட்டனர். ஆனால் இன்னொரு தரப்பினரோ, "எடப்பாடியை எதிர்க்க துணிச்சல் இல்லாமல் ஓடிவிட்டனர். நாங்கள் தான் உண்மையான அதிமுக என தினகரனே நினைப்பதால் தான் அவர்கள் போட்டியிடவில்லை என விமர்சித்தால் அது நமக்கு கேவலமானது. தேர்தலில் வெற்றி - தோல்வியை வைத்து முடிவு செய்யாமல் எதிர்கொள்ள வேண்டும். அதனால் போட்டியிடுவதுதான் சரியானது என அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அதனை ஒப்புக்கொண்ட தினகரன், போட்டியிடுவது என தீர்மானித்தார். இந்த தகவலை அறிந்த சசிகலாவும், அவரது குடும்பமும், ’போட்டியிட வேண்டாம்’ என தினகரனுக்கு தகவல் தந்தனர். ஆனால் இதனை அவர் ஏற்க மறுக்க, தன்னை வந்து சந்திக்கும்படி தினகரனுக்கு கட்டளையிட்டார் சசிகலா. இதனையடுத்து, திருச்சியில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட தினகரன், நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்தப்படியே பெங்களுரு பறந்திருக்கிறார்.>இதற்கு முன்னதாக இன்று காலையில் சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூர் சென்றிருக்கிறார் தினகரனின் மனைவி அணுராதா. பெங்களுருக்கு தினகரன் பறந்துள்ள நிலையில், சசிகலாவின் முடிவை ஏற்பாரா? நிராகரிப்பாரா? என்கிற கேள்வி தினகரன் ஆதரவாளர்களிடம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக