ganesh.babu. : நிலவேம்பு
கசாயம் பற்றிய விவாதத்தில், 'கசாயம் குடித்தால் டெங்கு நோய் தீரும் என்று
சொல்கிறீர்களே, விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க தயாரா(accountability)?'
என்று அண்ணன் Ravishankar போன்றவர்கள் தொடர்ந்து அவரது பதிவுகளில்
களமாடியப் பிறகே அடங்கிய சித்த மருத்துவர் சிவராமன் ஒருக்கட்டத்தில்
'நிலவேம்பு' பற்றிய அந்தப் பதிவையே நீக்கிவிட்டார். Smart move.
ஆனால் கொடுமை என்ன தெரியுமா? நிலவேம்பு விடயத்தில் ஒரு சித்தா மருத்துவரே உண்மையை ஒப்புக்கொண்டதால் மரபுசார் மருத்துவம் பேசும் அறைகுறைகளும், போலிகளும் கடும் மன-உளைச்சலில் இருக்க, 'கோவை பிரதர்ஸ்' என்ற ஒரு படத்தில் வரும் கிரிக்கெட் போட்டிக் காட்சியில்,
"பரிதாபமான நிலையில் உள்ள பாப்பம்பட்டி அணியை காப்பாற்ற, அந்த அணியின் கேப்டன் ஏகாதேசி(வடிவேலு) களமிறங்குகிறார்" என்பதைப் போல அண்ணன் சுப.உதய குமார் களத்திற்கு வந்திருக்கிறார்.
அந்த படத்தின் கிரிக்கெட் போட்டியில் பாப்பம்பட்டி அணியைச் சார்ந்தவர்கள் யாரும் அதுவரை கிரிக்கெட்டை அறியாதவர்களாக இருப்பர், மரபுசார் மருத்துவத்தை பரிந்துரைக்கும் மொன்னைகள் பலர் மருத்துவமே அறியாதவர்களாக இருப்பதைப் போல. கூரை ஏறிக் கோழி பிடிக்கும் ஒருவன், தான் பேட்டிங்க செய்கிறப்போது வந்தப் பந்தை கேட்ச் செய்துவிட்டு "கேட்ச்...கேட்ச்" என்று கொண்டாடுவான், மற்றொருவனோ ரன் எடுக்கச் சொன்னால் பிச்சை எடுப்பான். மரபுசார் மருத்துவ அணியில் செந்தமிழன், பீலா பாஸ்கர் ஆகியோரைப் போல.
இவர்களாவது பரவாயில்லை, கடைசியாக வரும் அணியின் கேப்டன் வடிவேலுவோ களமிறங்கியப்பின் நடு மைதானத்தில் வந்து படுத்துத்தூங்கிவிடுவார். அதே மாதிரி நம் அண்ணன் சுப.உதயகுமார் அறியாமையிலும், அபத்தங்களிலும் தன் அணியையே மிஞ்சுகிற மாதிரி மரபுசார் மூலிகைகளை ஆதரித்து 'நிலவேம்பு மரத்தை'(?!) பற்றி, உணர்ச்சிப் பிழம்பாக ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அய்யோ பாவம்! அவரிடம் "நிலவேம்பு என்பது ஒரு மரமே இல்லை" என்பதை எப்படிச் சொல்வேன்? வேப்பமரம் நிலத்தில் வளர்வதால் 'நிலவேம்பு' என்று நினைத்துவிட்டார் போலும். இவ்வளவுதான் இவர்களுடைய அறிவும், ஆராய்ச்சியும். இந்தக் கும்பலின் பேச்சைக் கேட்டு டெங்கு வந்தப்பிறகும் நவீன மருத்துவரை நாடாமல் கசாயத்தை மட்டும் குடித்துவிட்டு சாகிற மக்களை என்னத்த சொல்ல?
அவர் மற்றொரு அலப்பறையையும் அரங்கேற்றியுள்ளார். இவர்களது அறியாமையைப் பற்றி தொடர்ந்து எழுதிவரும் திராவிட இயக்க கருத்தாளர்களுள் ஒருவரான அண்ணன் Don Ashok அவர்களை வேறு கலாய்க்க முயன்று, பதற்றத்தில் வன்மத்தைக் கக்கியிருக்கிறார். வேறொன்றும் இல்லை, தி.மு.க எதிர்ப்பாளர்களின் ஆதரவைப் பெற இப்படி ராஜதந்திரமா நடந்துக்குறாராமாமாமாம். தல, இப்படி டெங்கு வந்து மக்கள் செத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் 'கசாயம் குடி, மாட்டு மூத்திரம் குடி'னு கம்பு சுத்தினா தி.மு.க எதிர்ப்பாளர்கள் வேண்டுமானால் சிலிர்த்து சில்லறையை விட்டெறியலாம். ஆனால் பொதுமக்கள் பிரித்துப் பேன் பார்த்துவிடுவார்கள் ஜாக்கிரதை.
இதிலென்ன கொடுமை என்றால், இதுப்போன்றவர்களுக்கு எப்படி கொஞ்சம்கூட அறிவியலோ, மருத்துவமோ தெரியாதோ, அதேமாதிரிதான் இவர்களுக்கு கலாய்க்கவும் தெரியாது. அந்தாளு சும்மாவே ஹேஷ்டேக் ட்ரெண்ட்னு பேயாட்டம் ஆடுவாப்டி, இவனுகவேற wantedஆ வந்து வண்டியில ஏறிக்கிட்டு. சரி, நீங்க டான் அசோக்கிட்டதான் கலாய்ப்பதெப்படின்னு கத்துக்கனும்னு ஆசைப்பட்டா, அதைக் ஏன் கெடுப்பானேன்?
சுப.உதயகுமாரை விடுங்கள். பொதுவாகவே இதுப்போன்ற சமூகப் பொறுப்பற்று மரபு, மூலிகை என்று எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல் மக்களின் உயிரோடு விளையாடும் எவராக இருந்தாலும் பொதுமக்கள் அவர்களை எப்படிக் கையாளவேண்டும்? மேற்சொன்ன அதே 'கோவை பிரதர்ஸ்' படத்தின் நகைச்சுவைக் காட்சியில் கடைசியாக ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து வடிவேலுவுக்கு என்ன செய்வார்களோ அதையே செய்துவிட்டுக் கடந்து செல்லவேண்டும்.
#நிலவேம்புமரம்
-Ganesh Babu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக