இவர் மதுரையில் பிறந்த தமிழிச்சி ..ஆனாலும் விக்கிபீடியா இவரை "பிராமின்" என்று போட்டு இருப்பதை object செய்து நீக்காமல் இருக்கும் ஜாதி வெறியற்ற ஒரு பெண்மணி என்ற benefit of doubt அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் ..
பிஜேபி காவிரி விஷயத்தில் இரண்டு திராவிட அரசும் 25 வருடமாக போராடி பெற்ற காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்சநீதிமன்றத்தில் செய்த துரோகம் சின்ன குழந்தைக்கு கூட தமிழ்நாட்டில் தெரியும் . இவர் தேர்தலில் நிற்காமல் கர்நாடக பிஜேபி உறுப்பினர்கள் ஆதரவு மூலம் ராஜ்யசபா வில் நுழைந்தவர் அதனால் இவரால் கர்நாடகாவை எதிர்த்து தும்மல் கூட போட முடியாத இக்கட்டான சூழ்நிலை அதையும் நீங்கள் உணர வேண்டும் ..
சரி காவேரி தான் எதிர்க்க முடியாது இவர் உத்திரவாதம் #neet not for one year assurance செய்து முடித்து இருக்கலாமே ..செய்து இருந்தால் அனிதா இறந்து இருக்க மாட்டாரே என்று உங்கள் ஆதங்கம் கூட தப்புதான் ப்ரோ ..
சட்டமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆலோசனை படி செயல்படும் அட்வொகேட் ஜெனரல் அன்றைய commerce minsiter இவர் பேச்சை எப்படி கேப்பார் என்று நீங்கள் எண்ணி இருக்க வேண்டாமா உங்களை யார் அவர் பேச்சை நம்பி மோசம் போனோம் என்று அழ சொன்னது ...அவர் அப்படி தான் உத்திரவாதம் கொடுப்பார் .. உங்களுக்கு மீடியா போல கேள்வி கேக்காமல் அறிவு எழாமல் போனது உங்கள் குற்றமே ..
இவர் மூன்று வருடமாக வைத்து இருந்து முக்கிய துறையாம் commerce ministry யில் இவரை செய்த வேலை ஏற்றுமதியை வீழ்த்தி படு பாதாளத்தில் கொண்டு சென்றது என்பது மோடி அரசு புள்ளி விவரம் சொல்லும் சேதியில் தெரிந்து கொள்ளலாம் .. ஒரு பானை சோற்று ஒரு சோறு என்பது போல இந்தியாவின் மிக பெரிய வணிக வர்த்தக நாடான சீனாவை எடுத்து கொள்வோம்
மன்மோகன் சிங்க் தலைமையில் உள்ள ஆட்சியில் இந்தியாவின் ஏற்றுமதி சீனாவிற்கு முறையே :
2011-2012 = 18.1 பில்லியன் டாலர்
2012-2013 = 13.5 பில்லியன் டாலர்
2013 -2014 = 14.8 பில்லியன் டாலர்
அதாவது ஆண்டு ஒன்றுக்கு சராசரி சீனாவிற்கு ஏற்றுமதி 15.5 பில்லியன் டாலர் (ஒரு லட்சம் கோடி)
மோடி தலைமையில் உள்ள பிஜேபி கட்சியின் தலைமையில் உள்ள ஆட்சியில் இந்தியாவின் ஏற்றுமதி சீனாவிற்கு முறையே :
2014-2015 = 11.9 பில்லியன் டாலர்
2015-2016 = 9 பில்லியன் டாலர்
2016 -2017 = 10.2 பில்லியன் டாலர்
அதாவது ஆண்டு ஒன்றுக்கு சராசரி சீனாவிற்கு ஏற்றுமதி 10.3 பில்லியன் டாலர் ( 66 ஆயிரம் கோடி )
இது மட்டும் இல்லை என்ற Trade gap என்ற முக்கிய காரணியிலும் மாபெரும் சறுக்கல் விவரங்களுக்கு ஸ்ப்ளக்கோ வில் வந்த கட்டுரையில் காணலாம் http://tamil.splco.me/vanigam/vanigam08.html
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நாட்டை சுமார் 13 வருடம் பின்னோக்கி எடுத்து சென்று விட்டார்கள் .. இது கூட வேத காலம் நோக்கி பின்னோக்கி பயணிப்பு என்று முறையில் ஊடக ஜாம்பவான்கள் Rangaraj Pandey Karthigai Chelvan Gunaa Gunasekaran Nijanthan Nijanthan போல இதை எல்லாம் நோண்டாமல் நீங்களும் அமைதியாக இருந்து விட வேண்டும் ..
8th standard "C" senction தோல்வியுற்ற ஒருவர் நீட் எழுதாமல் மருத்துவ படிப்பு கிடைக்கும் என்றால் அதில் எவ்வளவு பெருமை பட வேண்டும் . அப்படி தோல்விக்கும் உயர் பதவி கொடுத்து மேம்புற செய்யும் மோடியை எவ்வளவு நீங்கள் பாராட்ட வேண்டும் ..
அதை விட்டிட்டு இங்க வந்து #அனிதா #நீட் #swatchbharat வரி போச்சே ஐயோ #demonetisation போச்சே என்று புலம்புதல் நீதியா தர்மமா ..
மாண்புமிகு அமைச்சர்அரிசி விற்பவர்கள் வரி அதிகம் என்று நினைத்தால் brand பெயர் போடாமல் விற்பனை செய்யுங்கள் என்று உபாயங்கள் வழங்கி மகிழ்ந்தவர் என்பதை நினவில் வைத்து போற்றுங்கள் ..
இதில் சட்டப்படி brand போடாமல் தனியாக விற்க கூடாது என்பது மாண்புமிகு அமைச்சருக்கு தெரியாத என்றெல்லாம் அவரை நீங்கள் கழுவி ஊற்ற கூடாது .. வேலை பளுவில் அவர் மறந்து இருக்க கூடும் என்பதையும் நீங்கள் அருள் கூர்ந்து எண்ணி பார்க்க வேண்டும் ..
மாண்புமிகு அமைச்சர் ஹோட்டலில் 18% GST வரி கட்ட முடியாவிட்டால் வீட்டில் பொங்கி சாப்பிடு என்று சிக்கன முறையை ஊக்குவிக்கும் இனிய உபதேசம் எல்லாம் செய்தவர் என்பதையும் நினவில் வைத்து Sumanth Raman ., மாலன் நாராயணன் #thuklaq #gurumurthi போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் #RSS #BJP போற்றுங்கள் .
காங்கிரஸ்காரர் கணவராக வைத்து கொண்டே இப்படிபட்ட பெருமை மிக்க பெண்மணியை 2008 ஆண்டு பிஜேபி குள்ளே நுழையும் ஒருவர் டாப்பில் பாதுகாப்பு அமைச்சர் ஆவது பெருமை தானே .. இதை 20 ஆண்டுகள் மேலாக பிஜேபி உள்ளே இருந்து அதனை வளர்க்க பாடுபடும் Tamilisai Soundararajan Pon Radhakrishnan போன்ற உயர் சிந்தனை கொண்டோர்கள் மறுக்க மாட்டார்கள் என்று ஜாதி வெறியற்ற ஒரு பெண்மணி சார்பாக நீங்கள் மறுபடியும் அருள் கூர்ந்து எண்ணி பார்க்க வேண்டும் ..
கேள்விக்கு .. இன்னும் வடை வரலே தம்பி என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது .. போபோர்ஸ் ஊழல் வெளிவந்து 28 வருடங்கள் ஆகி விட்டது ,,அந்த 28 வருடத்தில்
ராஜிவ் காந்தி குடும்பம் ஆட்சி செய்யாத காங்கிரஸ் அரசு : 15 வருடம்
ராஜிவ் காந்தி குடும்பம் ஆட்சி செய்யாத பிஜேபி அரசு : 10 வருடம்
ராஜிவ் காந்தி குடும்பம் ஆட்சி செய்யாத காங்கிரஸ் இல்ல மற்ற அரசு : 3 வருடம்
கூட்டி பாருங்க 28 வருடங்கள் .. இப்போ ராஜிவ் காந்தி குடும்பம் ஆட்சி செய்யாத காங்கிரஸ் அரசு ராஜிவ் குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கும் என்ற உங்க வாதத்தை அப்படியே எடுத்துப்போம் சோ 15 வருடம் கழிச்சிடுங்க ..
மீதம் உள்ள 13 வருடத்தில் சமூக வலைதள மொழியால் கேக்க வேண்டும் என்றால் எந்த ஆணியை புடுங்கி கொண்டு இருந்தீர்கள் என்ற கேள்வி வருமே ... என்ன பதில் சொல்வது ..
அருள் கூர்ந்து அறிவை கொடுப்பா... ஏடுகொண்ட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக