வியாழன், 19 அக்டோபர், 2017

சென்னையில் காற்றின் மாசு அளவு 777 நுண்துகளை எட்டியது... மிகவும் ஆபத்தான அளவு!

cauverynews.tv :சென்னையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டியதில் காற்றின் மாசு அதிகபட்சமாக 777 நுண்துகள்கள் வரை உயர்ந்துள்ளது.  அதிக அளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகையால் சென்னை மாநகரமே புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனிடையே சென்னையில் 5 இடங்களில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் காற்றில் மாசின் அளவை கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி தொடர்ந்துள்ளது. ஆய்வின் முடிவில் சாதராண நாட்களை விட தீபாவளியன்று காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார் அதன்படி திருவேலிக்கேணியில் சாதாராண நாட்களில் காற்றில் மிதக்கும் நுண்துகள் 47, தீபாவளியன்று 597, நுங்கம்பாக்கத்தில் சாதாரண நாட்களில் 50, தீபாவளியன்று 541, தி.நகர் பகுதியில் சாதாரண நாட்களில் 68, தீபாவளியன்று 529 என்ற அளவில் இருந்து உள்ளது. அதிகபட்சமாக செளகார்பேட்டை பகுதியில் சாதராண நாட்களில் 70, தீபாவளியன்று 777 என்ற அளவாகவும் குறைந்தபட்சமாக பெசன்ட்நகர் பகுதியில் சாதாரண நாட்களில் 62, தீபாவளியன்று 387 என்ற அளவில் பதிவாகி உள்ளது. காற்றின் மிதக்கும் நுண்துகள்களின் அளவு 100 மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக