ஞாயிறு, 29 அக்டோபர், 2017

அரசு மருத்துவமனைகளை குறைகூறும் பலரும் அதன் பக்கமே சென்றிருக்கமாட்டார்கள்.

vimal raj jkm : 'மெர்சல்' எனும் அட்லியின் ஆஃப்பாயில்.
இந்த படத்தை பற்றி பேச நிறைய இருக்கு. இதுல முக்கியமான பிரச்சனையே GST யோ இல்ல Digital India பத்தின டயலாக்கோ இல்ல, மருத்துவ துறை பற்றி அதுவும் நவீன மருத்துவம் பற்றி சொல்லப்பட்ட அரை வேக்காட்டுத்தனமான,  தவறாக வழிநடத்தக்கூடிய ஆபத்தான வசனங்கள் தான்.
இந்த BJP பாய்ஸ் GST,GSTனு கத்துனதால மருத்துவர்களோட குரல் வெளியவே பெருசா கேக்காம போய்டுச்சு.

படத்துல எதெதுக்கோ எவ்வளவோ மெனக்கெட்டுருக்காங்க, அதுல 1% மருத்துவதுறை பற்றி தெரிஞ்சுக்க மெனக்கெட்டுருந்தா Radial Artery எங்க இருக்கும்னு தெரிஞ்சிருக்கும், at least MD படிச்சுட்டு surgeon ஆகமுடியாது (அதுலயும் one of the best surgeons in the world வேற), MS படிச்சாதான் surgeon ஆகமுடியும்னாவது தெரிஞ்சிருக்கும்.

இப்படி MS க்கும் MD க்குமே வித்தியாசம் தெரியாம இவங்க சிஸேரியன் பத்தி பேசுறாங்க. ஏற்கனவே முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லைனு கூவிட்டு இருக்குற கும்பலுக்கு இதுலாம் orgasmic ஆக இருந்திருக்கும்.
ஏன்னா அவங்கள பொறுத்தவரைக்கும் முன்னோர்களின் காலம் பொற்காலம், பாலாறும் தேனாறும் ஓடிய காலம். பாட்டி காலத்துல டெலிவரி டைம்ல எத்தனை குழந்தைகள்,அம்மாக்கள் இறந்தாங்க, நவீன மருத்துவம் வந்த பிறகு Infant Mortality Rate, Maternal Mortality Rate எல்லாம் எவ்வளவு குறைஞ்சிருக்கு Average Life Expectancy எவ்வளவு உயர்ந்திருக்குனுலாம் அவங்க கண்ணுக்கு தெரியாது.
அம்மா வைத்துதர மிளகு ரசம் தான் உலகத்துலயே best medicine ஆம், எதாவது நோய் வந்தா Dr. மாறன் அதை குடிச்சே சரி பண்ணிக்குவாராம். Common Coldக்கு கூட OK, அதுவே TB, Pneumoniaலாம் வந்தா என்ன பண்ணுவாராம்? அப்பவும் மிளகுரசம் குடிச்சே சரிபண்ணிக்குவாரா?
இவங்க, சில மருத்துவர்கள் தப்பு பண்றாங்க, சில கார்ப்பரேட் மருத்துவமனைகள் தப்பு பண்ணுதுனு சொன்னா கூட பரவாயில்ல, Medical Checkup என்பதே ஒரு scam எனும் அள்விற்கு உளறிதள்ளியிருக்குறாங்க.
இது வெறும் சினிமா தானே இதை எதுக்கு சீரியஸா எடுத்துக்கனும்னு நினைக்கலாம், ஆனா நிஜவாழ்க்கையிலும் மோசமான தாக்கங்களை உருவாக்கியிருக்கு.
என் அப்பாவிற்கு 10 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது, கடந்த வருடத்திலிருந்து ஆயுர்வேதா மருந்துகளும் எடுத்துக்கொண்டிருந்தார்.போன ஏப்ரல் மாதம் திடீரென Heart attack வந்து கிட்டத்தட்ட பிழைப்பதே கஷ்டம் என்கின்ற நிலைக்கு போய்விட்டது. Sever LV failure, EF 33%. அப்பல்லோவில் CABG (bypass surgery) செய்தோம். நவீன மருத்துவம் தான் அவரை காப்பாற்றியது. ஒரு இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு Master Checkup செய்திருந்தால் இந்த நிலமைக்கு வராமல் முன்கூட்டியே தடுத்திருக்கலாம். அப்போதே மெடிக்கல் செக்கப் செய்திருந்தால் பத்தாயிரம் ரூபாயோடு முடிந்திருக்கும், பத்து லட்சம் ரூபாய்க்கு சர்ஜரி செய்யவேண்டியதாகிவிட்டது, இவ்வளவு ஆபத்தான நிலைக்கும் வந்திருக்க தேவையில்லை.
மெர்சல் படம்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லவரல. சில ஆண்டுகளாவே நம்ம வாட்ஸாப் தமிழர்கள், மக்கள் மத்தியில 'முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை, கார்ப்பரேட் சதி, இல்லுமினாட்டி' அது இதுனு சொல்லி ஒரு குழப்பத்தை உண்டாக்கி எதையெடுத்தாலும் சந்தேகப்படவைத்து குஷியாகிக்கொண்டு இருக்கிறார்கள். அரசாங்கம்,ஊடகத்துறை போன்றவற்றின் மீது மக்களுக்கு உள்ள அவநம்பிக்கையை சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இவையெல்லாம் ஹீலர் பாஸ்கர் மாதிரி டுபாக்கூர்கள் வளர்ந்து பெருக உதவியாகிவிடுகிறது.
மக்களிடம் உருவாக்கப்பட்ட இந்த மனநிலையை வைத்தே ஆர்கானிக் ஸ்டோர், செக்கு எண்ணெய், நாட்டுமாட்டு பால்னு (A2 Milk பிஸ்கட் வேற) சைடுல நிறைய ஓடிக்கிட்டிறுக்கு.
ஹீலர் பாஸ்கர் மாதிரியே அட்லியும் பாரம்பரியம்,முன்னோர்கள்,கார்ப்பரேட் சதி மாதிரியான விஷயங்களை வைத்து அவரோட படத்தையும் வியாபரம் பண்ணிட்டார்.
சரி, இதையெல்லாம் மக்கள் எப்படி ஈசியா நம்புறாங்க? ஏன்னா இங்க யாருக்கும் அறிவியல் தெரியல. படிக்காதவங்கள விட படிச்சவங்க தான் இந்த மாதிரி ஆளுங்களுக்கு பலிகடா ஆகுறாங்க. பல படித்த அங்கிள்ஸ்தான் வாட்ஸாப்ல இந்த மாதிரி ஹீலர் பாஸ்கர் வீடியோவையும், முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை புருடா கதைகளையும் forward பண்ணிகிட்டு இருக்காங்க. பிரச்சனை இவங்களுக்கு அடிப்படை அறிவியலே தெரிவதில்லை.
ஒரு அல்லோபதி மருந்து மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்பு எவ்வளவு research,trials முடித்து வருகிறது, ஒவ்வொரு medical procedures,investigationsக்கு பின் எவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பதெல்லாம் தெரிவதில்லை. மருத்துவம் மட்டுமல்ல, இயற்பியல்,வேதியியல் என்று எந்த அடிப்படை அறிவியலும் தெரிவதில்லை வெறுமனே பண்பாட்டின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் வெற்று திமிர் மட்டும் அள்வுக்கு அதிகமாகவே இருக்கிறது.
இவைதான், சத்குரு, ஹீலர் பாஸ்கர், தற்போது அட்லி என அனைவருக்கும் மூலதனமாகிறது.
மெர்சலின் அபத்தங்களுக்கு எதிராக பேசும் மருத்துவர்களிடமும் நம்ம வாட்ஸாப் தமிழர்கள் ஃபேஸ்புக்கில் வம்புக்கு போகிறார்கள். ஒரு வாட்ஸாப் தமிழன் ஒரு மருத்துவரின் பதிவு ஒன்றில் Germ Theory என்பதே கட்டுக்கதை,ஒரு கார்ப்பரேட் சதி என்று கூவிக்கொண்டிருந்தார். மருத்துவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுவிற்கு நடுவே இந்த மாதிரி அப்பரசண்டிகளுக்கு எப்படி வகுப்பெடுத்து நேரத்தை வீணாக்குவது?
முன்னோர்கள் முட்டாளோ இல்லையோ ஆனால் மெர்சல் மாதிரி படத்துல வர டயலாக்குகளையும் வாட்ஸாப் தமிழர்களின் புருடா கதைகளையும் நம்பி கூவுற எல்லாரும் முட்டாள்கள் தான்.
பி.கு: இவன் ஒரு anti-vijay fan ஆக இருப்பான் போல அதனால தான் இப்படி பேசுறான்னு நினைக்குறவங்களுக்கு - "டேய் நான்லாம் பொறந்ததிலேர்ந்து விஜய் fan டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக