ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஷாலின் : உனக்கு எதுக்கு பாரின் காரு? நீ ஏன் மாட்டுவண்டில ,இல்ல குதிரை வண்டில போக கூடாது ?

Shalin Maria Lawrence : அய்யா ஒரு காலத்துல முரளிதரனும் ,வேலாயுதமும்
அவங்க பேர் பின்னாடி ஜாதி பெற போட்டுபாங்கைய்யா . அப்போ குப்பனும் சுப்பனும் ,அம்மணி அம்மாவும் பேருக்கு பின்னாடி போட்டுக்க ஒன்னும் இல்லாம தலைகுனிஞ்சு நின்னாங்க .
அப்போ இங்கிலீஸ்காரங்க நம்ம ஊருக்கு வந்தாங்க அய்யா .இங்க கல்வி நிராகரிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு முறையா கல்வி குடுத்தாங்க . அப்படியே அவங்களுக்கு இங்கிலீஷும் சொல்லி குடுத்தாங்க . கொஞ்சம் கொஞ்சமா இந்த மாநிலத்துல குப்பனும் ,சுப்பனும் பேருக்கு பின்னாடி இங்கிலிஷ் ல இனிஷியல் போட்டுக்க ஆரம்பிச்சாங்கய்யா .
அப்படியே தல நிமிர ஆரம்பிச்சாங்க .B .குப்பன் ,R .சுப்பன் ,ஷாலின் M L அப்படி .

இதை பாத்த மத்தவங்களை கொஞ்சம் வெக்கப்பட்டு அவங்க பேருக்கு பின்னாடி இருக்க ஜாதிய எதுத்துட்டு இனிஷியல் போட்டுக்கிட்டாங்கய்யா .
இந்த இன்ஷியல் பின்னாடி இருக்க கதை இதுதான் .
வரலாறும் தெரியாம ,அறிவியலும் புரியாம இருக்குற நீ ....பொய் பேசுவதையும் ,பேச்சை மாற்றி மாற்றி பேசுவதையும் வழக்கமாக கொண்ட தரம் கெட்ட நீ......இசூசுங்குற ஜப்பான் கார வச்சிட்டு இந்த பேச்சு பேசலாமா ?
இங்கிலிஷ் இன்ஷியல் வேணாம்னு சொல்லுறியே ,உனக்கு எதுக்கு பாரின் காரு? நீ ஏன் மாட்டுவண்டில ,இல்ல குதிரை வண்டில போக கூடாது ?
திரு சீமான் அவர்களே....எப்பொழுதும் மற்றவர்களை மரியாதையாக பேசும் நான் ,இங்கே ஒருமை உபயோகித்தது ,நீங்கள் எப்படி எங்களை ஒருமையில் பேசலாம் என்று கேட்டுதான். நாங்கள் உங்களை மரியாதை இல்லாமல் பேச ஒரு நொடி ஆகாது . வட சென்னை கெட்டவார்த்தை கேட்டதுண்டா நீர் ?
ஆனால் ,உங்களுக்கு இல்லாத கண்ணியமும் நேர்மையும் எங்களிடம் உள்ளது .பெரியார் வழிவந்த நாங்கள் ஒரு நாளும் நாகரிகம் மறந்து பேச மாட்டோம் உங்களைப்போல் .

நாங்கள் கற்றுக்கொண்ட ஆங்கிலம் எங்களை என்ன செய்தது தெரியுமா ?
உலகில் வேறு எங்கும் ஜாதி என்கிற ஒரு இழிவு இல்லை அது இந்தியாவில் மட்டுமே உள்ளது என்பதை எங்களுக்கு வெளிப்படுத்தியது ஆங்கிலம் .
இந்தி திணிப்பை ,ஆரிய திணிப்பை ஓரம்கட்ட எங்களுக்கு இருந்த முக்கிய ஆயுதம் ஆங்கிலம் .
எங்கள் அம்பேத்கரையும் ,ரெட்டைமலை சீனிவாசனையும் ,அயோதி தாசரையும் வெள்ளைக்காரனுக்கு அறிமுக படுத்தியது ஆங்கிலம் . வட்டமேஜையில் தமிழ் உட்கரந்ததற்கு காரணம் ஆங்கிலம் .
ஒடுக்கப்பட்டவனுக்கு கல்வியை கொடுத்தது இந்த ஆங்கிலம் .
உலகின் விடுதலை போராட்டங்களை புத்தகங்கள் மூலமாகவும் ,திரைப்படங்கள் மூலமாகவும் எங்களுக்கு எடுத்து சொன்னது ஆங்கிலம் .
ஆங்கிலேயர்கள் ஏதுமற்ற கஜானவை விட்டு விட்டு போன பொது அம்பது வருடத்தில் இந்த நாட்டை பொருளாதாரரீதியாக திருப்பி கட்ட உதவியது ஆங்கிலம் .
காஷ்மீரின் வலியையும் ,அஸ்ஸாமின் வலியையும் ,பாப்பாரப்பட்டியின் வலியையும் ஒரே புள்ளியில் இணைத்தது ஆங்கிலம் .
மற்ற நாடுகளுடன் வணிகம் ,அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய விஷயங்களை பகிர்ந்துகொண்டு முன்னேற உதவியது ஆங்கிலம் .
தமிழ் கண் ,அந்த கண்ணில் ஜாதி புகுந்து பார்வை மங்கலான போது எங்களுக்கு பவர் கண்ணாடியாய் உதவியது ஆங்கிலம் .
இன்று நீங்கள் ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லுவது உங்களை பின்பற்றுபவரை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடுதான் . உன்னை காட்டிலும் ,ஆங்கில துணையோடு ஈழ தமிழர்களின் பிரச்னையை உலகளவில் எடுத்து செல்லும் வைகோ எவ்வளவோ மேல் .
இந்த நிலையில் ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லுவது உன் முட்டாள்தனம் அல்ல மாறாக மற்றவனை முட்டாளாக செய்யும் செயல் .எந்த மூடனும் உன்னை போல் நாட்டின் முன்னேற்றத்தை பற்றி கவலை படாமல் ,இனவாதம் செய்ய மாட்டான் .
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக