ஞாயிறு, 29 அக்டோபர், 2017

நடிகை அமலா பால் போலி முகவரியில் கார் பதிவு .. வரி ஏய்ப்பு !

விகடன் தினேஷ் ராமையா    :   போலி முகவரி கொடுத்து சொகுசுக் கார் வாங்கி ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமலா பால் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக விலைகொண்ட பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசுக் காரை வாங்கியதாகத் தெரிகிறது. அந்த சொகுசுக் காரை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் அவர் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சொந்தமாநிலமான கேரளாவில் அந்த காரைப் பதிவு செய்திருந்தால் வரியாக மட்டுமே, காரின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாக, அதாவது ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலுத்த வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காகவே, அவர் புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்து அங்கு பதிவு செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.


புதுச்சேரியில் உள்ள மாணவர் ஒருவரின் முகவரியில் அந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவருக்கு எந்த தகவலும் தெரியாது என்றும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த காரை கொச்சியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தியுள்ள நடிகை அமலாபால், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அந்த காரைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக