ஞாயிறு, 1 அக்டோபர், 2017

சிதம்பரம் : புல்லெட் ரயில் பொருளாதாரத்துக்கு விழுந்த அடுத்த அடி ! பணமதிப்பு நீக்கம் போறதுதான் .

பாதுகாப்பை புல்லட் ரயில் திட்டம் கொன்றுவிடும்!மின்னம்பலம் : மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் பணமதிப்பு நீக்கத்தைப் போன்றதாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மும்பை முதல் அகமதாபாத் வரையில் புல்லட் ரயில் சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜப்பான் அரசு 88,000 கோடி ரூபாய் கடன் தொகையை 0.1 சதவிகித வட்டி விகிதத்துக்கு வழங்கவுள்ளது. 50 ஆண்டுகளுக்கு இத்தொகையை இந்திய அரசு ஜப்பானுக்குச் செலுத்த வேண்டும். ஏற்கனவே இதுபற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மும்பை அகமதாபாத் நகரங்களுக்கு இடையே விமானத்தில் பயணிப்பதை விட புல்லட் ரயிலில் பயணிக்க அதிக செலவாகும். மேலும் விமானத்தில் விரைவில் சென்றுவிட முடியும். இத்திட்டத்துகாக ஜப்பான் அரசிடம் பெறும் கடனால் வருங்கால தலைமுறையினர் மீது ஏராளமான கடன் சுமை திணிக்கப்படும் என்றும் விமரசனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், புல்லட் ரயில் திட்டம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். செப்டம்பர் 29ஆம் தேதியன்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பணமதிப்பு நீக்கத் திட்டத்தைப் போலவே தான் புல்லட் ரயில் திட்டமும் இருக்கும். பாதுகாப்பு உள்பட அனைத்தையும் இத்திட்டம் கொன்றுவிடும். ரயில்வே பாதுகாப்பு, சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த வசதிகள் போன்றவற்றில் ரயில்வே துறை செலவிட வேண்டும். புல்லட் ரயிலில் செலவிட வேண்டிய அவசியமில்லை. புல்லட் ரயில் திட்டம் சாதாரண மக்களுக்கானது அல்ல. பணம் படைத்தவர்கள் தங்களின் ஆடம்பரத்தை காட்டிப் பயணிக்கவே அது பயன்படும்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக