ஞாயிறு, 1 அக்டோபர், 2017

குமரி அனந்தன் பாரதமாதா கோவில் அமைக்க நடைபயணம் ... தமிழிசையோடு சேரப்போகிறாரோ?

குமரி அனந்தன் நடைபயணம்!மின்னம்பலம் : தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் அமைக்கக் கோரி காந்தி பேரவைத் தலைவர் குமரி அனந்தன் சென்னையிலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதி (நாளை) நடைபயணத்தை தொடங்கவுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையில் அருகில் இருந்து நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் நடைபயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் தொடங்கி வைக்கின்றனர். இந்த நடைபயணம் அக்டோபர் 21 ஆம் தேதி பாப்பாரப்பட்டியில் நிறைவடைகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குமரி அனந்தன் கூறுகையில், “பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் எழுப்பக்கோரி பல முறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதையடுத்து, எனது கோரிக்கையை பரிசீலித்து 2 மாதங்களில் உரிய முடிவை எடுக்கவும், அதுகுறித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கடந்த 2015 ஜூன் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அரசு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபயணம் செல்ல உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக