திங்கள், 2 அக்டோபர், 2017

அரசை விமர்சித்தால் கவுரிக்கு நேர்ந்த கதிதான்: வாட்ஸ் அப் மிரட்டல்!

அரசை விமர்சித்தால் கவுரிக்கு நேர்ந்த கதிதான்: வாட்ஸ் அப் மிரட்டல்!
மின்னம்பலம் : வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் வந்ததாக நான்கு ஊடகவியலாளர்கள் டெல்லியிலும் நோய்டாவிலும் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினரால் இதுவரை எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகப் பல ஊடகவியலாளர்கள் இன்று (அக்டோபர் 2) ஆர்பாட்டங்களை நடத்தினார்கள். மனிதச் சங்கிலி உள்ளிட்ட போராட்ட வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டன. ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு கோரி ஊடகவியலாளர்கள் உள்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்திகள் ஒரே மாதிரி இருப்பதாக ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நரேந்திர மோடி அரசு, பாஜக, ஆற்.எஸ்.எஸ். ஆகியவற்றை விமர்சித்தால் கவுரி லங்கேஷுக்கு ஏற்ற கதிதான் என்று அந்தச் செய்திகள் கூறுவதாகக் கூறப்படுகிறது. என்.டி.டி.வி.யைச் சேர்ந்த ரவீஷ் குமார் தனக்கு வந்த செய்திகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து செப்டம்பர் 22 அன்று வெளியிட்டுள்ளார். “நீ இன்னமும் உயிரோடு இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது” என்று ஒரு செய்தி கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக