ஞாயிறு, 15 அக்டோபர், 2017

மெர்சல் .. 3 நாட்களுக்கு பின்தான் .. தமிழ் ராக்கர்ஸ் சலுகை அறிவிப்பு..

வெப்துனியா :புதிதாய் வெளியாகும் படங்களை வெளியான அதே தினத்தில் வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ், விஜய்யின் மெர்சல் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படம் இன்னும் நான்கு நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களையும் கோர்ட் வழக்குகளையும் தாண்டி மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது.
படத்தின் புக்கிங் இன்று முதல் சில திரையரங்குகளில் துவங்கியது. இந்நிலையில் வெளியாகும் புது படங்களுக்கு பெரிய சிக்கலாய் இருப்பது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதற்கு முன்னர், மெர்சல் படம் வெளியாகும் நாளன்றே இணையத்தில் வெளியிடுவோம் என தெரிவித்தனர். ஆனால், தற்போது மெர்சல் படத்தை மூன்று நாட்களுக்கு இணையதளத்தில் வெளியிட மாட்டோம் என்ற அதிரடி முடிவை தமிழ் ராக்கர்ஸ் குழுவினர் எடுத்துள்லனர். இதனை தங்களது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக