ஞாயிறு, 15 அக்டோபர், 2017

3000 அடி உயரமலையில் இருந்து விழுந்து உயிரிழப்பு ... மூட நம்பிக்கை மரணம்!


வெப்துனியா :திருச்சி அருகே உள்ள கோவில் ஒன்றின் பிரகாரத்தை சுற்றி வரும்போது பக்தர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். திருச்சியில் உள்ள முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் 5000 அடி உயரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயில் பிரகாரத்தை சுற்றி வருவது வழக்கம். அது போல, இன்று கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்துள்ளார். அப்போது தவறி விழுந்துவிட்டார். கோயில் நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்ட பின்னர் போலிஸார் அங்கு விரைந்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பக்தர் இறந்து இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக