மாலைமலர் :அமெரிக்காவில் பால் அருந்தாத 3 வயது இந்திய பெண்ணுக்கு தண்டனையாக அவரது வளர்ப்பு தந்தை நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே தவிக்க விட்டதால் மாயமான சிறுமியை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமியை தேடும் பணியில் ஆளில்லா விமானம்
நியூயார்க்:
டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் புறநகரான ரிச்சர்ட்சன் பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ்(37). இவரது 3 வயது குழந்தை ஷெரின் கடந்த 7-ம் தேதி இரவு முதல் மாயமானதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, அவளுக்கு அளிக்கப்பட்ட பாலை குடித்து முடிக்காததால் ஆத்திரம் அடைந்த வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூஸ், அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டுக்கு வெளியே தள்ளி தன்னந்தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வெளியேவந்து பார்த்தபோது ஷெரின் காணாமல் போனதை அறிந்த வெஸ்லி மேத்யூஸ் இதுதொடர்பாக சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். சிறு குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் வெஸ்லி மேத்யூஸ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவில் பிறந்த ஷெரினை வெஸ்லி குடும்பத்தினர் முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அமெரிக்கா கொண்டுவரும் முன்னதாக சிறுமி ஷெரின் ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது சிறப்பு கவனம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசாரிடம் இந்த குடும்பத்தினர் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஷெரின் காணாமல் போவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வெஸ்லி மேத்யூஸ் வீட்டு காரும் காணாமல் போன சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல்போய் பத்துநாள் ஆகிவிட்ட நிலையில் சிறூமி வெஸ்லியை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவளை எப்படியும் உயிருடன் மீட்டு விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்த போலீசார் தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக