ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஷேக் ஹசினாவை கொல்ல முயற்சி: 11 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

maaliamalar :வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவை
23 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்ல முயன்ற சதி வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஷேக் ஹசினாவை கொல்ல முயற்சி: 11 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை டாக்கா: பாகிஸ்தானில் இருந்து தனியாக பிரிந்த வங்காளதேசம் நாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு பின்னர் அவாமி லீக் கட்சியின் தலைமையை ஷேக் ஹசினா ஏற்றார். ஷேக் ஹசினாவை கொல்ல 19 முறை தீட்டப்பட்ட சதி திட்டங்கள் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டன. அவ்வகையில், கடந்த 11-8-1989 அன்று ஷேக் ஹசினாவின் பூர்விக வீட்டுக்கு வந்த சில மர்ம நபர்கள் அவர் வீட்டில் இருந்த வேளையில் காவலர்களையும் மீறி வீட்டின்மீது வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.


 இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 1997-ம் ஆண்டு இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2009-ம் ஆண்டில் வங்காளதேசம் விடுதலை கட்சியை சேர்ந்த 16 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 20 ஆயிரம் டாக்கா அபராதம் விதித்து டாக்கா நகர நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முஹம்மது ஸாஹிதுல் கபிர் இன்று தீர்ப்பளித்தார். முன்னதாக, ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற மற்றொரு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, நினைவிருக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக