ஞாயிறு, 29 அக்டோபர், 2017

Goa ATM சுத்தியலால் அடித்த திருடனையும் துரத்திய காவலாளி..

Lakshmi Priya - Oneindia Tamil பனாஜி : கோவா மாநிலத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் உள்ள வங்கி ஏடிஎம் கொள்ளையை தன் உயிரையும் துச்சமாக நினைத்து முறியடித்ததற்கு காவலாளி செயலை அனைவரும் பார்த்து வியந்துள்ளனர். தலைநகர் பனாஜியில் உள்ளது பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா. இங்கு கொள்ளையன் ஒருவர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்த காவலர் அதை தடுத்து நிறுத்த போராடும் 40 வினாடிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதில் அந்த கொள்ளையனைப் பிடிக்கவும், கொள்ளையை முறியடிக்கவும் காவலாளி கடுமையாக போராடும் போது அவரது தலையில் கொள்ளையன் தான் வைத்திருந்த சுத்தியலால் 10 முறை ஓங்கி அடித்தார். ரத்தம் சொட்டிய நிலையில் தரையில் படுத்து அந்த கொள்ளையனை பிடிக்க காவலாளி கடுமையாக போராடி உள்ளார். இறுதியாக ரத்தம் சொட்டும் நிலையிலும் தப்பி ஓடிய கொள்ளையனின் பின்னால் காவலாளி ஓடும் சம்பவமும் நடந்துள்ளது. இந்த வீடியோவில் கொள்ளையன் முகத்தை மறைத்து கொண்டிருந்ததால் அது தெளிவாக பதிவாகவில்லை. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக