செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வள்ளலார் .. வாடிய பயிரைக் கண்டு வாடியவருக்கும், இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?

Bharathi Nathan : காலை நடைப் பயிற்சியின் போது வள்ளலார் பற்றிய ஒரு சுவரொட்டி கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் நின்று படித்தப் போது, இன்று அவரது 195 வது ஆண்டு நினைவு நாள் என்று தெரிந்தது. சற்று ஆவல் மேலிட, மேலும் படித்த சமயத்தில், அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காலை ஆறுமணி முதல் மதியம்வரை சன்மார்க்க சபையினரால் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. நான் அந்த மண்டபத்துக்கு போனபோது உள்ளே, நிகழ்ச்சி தொடங்கி விட்ட சத்தம் கேட்டது. நான் கைலி கட்டியிருந்ததால் உள்ளே நுழைய சின்ன தயக்கம். ஆனால், அதற்காக யாரும் தடை சொல்லவில்லை. மண்டபத்தின் உள்ளே ஒரு அருட்ஜோதி எரிந்துக் கொண்டிருந்தது. வெள்ளை உடை தரித்த ஆண் ஒருவர் திருவருட்பா வாசித்துக் கொண்டிருக்க, அதை பல வயதில் உள்ள பெண்களும், ஆண்களும் தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள். மெல்ல ஒரு இளைஞரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த போது சொன்னார் ‘வள்ளலாரின் வடலூர் ஆலயத்தை இந்து அறநிலையத் துறை கைப்பற்ற முயல்வதைக் கண்டித்து வருகிற அக்டோபர் மாதம், சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பெரிய நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கிறது’ என்று. நான் வாழ்த்துச் சொன்னேன். என் அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவருக்கும், இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக