கருப்பு கருணா
: ·
அமர்நாத் ராமகிருஷ்ணன் இருந்தபோது 2 ஆண்டுகளில் 2500 சதுரமீட்டர் அளவுக்கு கீழடியில் தோண்டப்பட்டது.அதில் 5300 தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன.
ஆனால் இப்போது ஸ்ரீராமன் தலைமையில் நடக்கும் ஆய்வில் இந்த ஓராண்டில் 400 சதுரமீட்டர் மட்டுமே தோண்டிவிட்டு ஒன்னும் கிடைக்கல என்கிறார்.
அதுக்குள்ள எல்லாத்தையும் பூதம் தூக்கிட்டு போயிட்டு இருக்குமா?
# கீழடியை மூட சதி
chinnaia kasi :தீக்கதிர் தலையங்கம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வை ை என்பது தெளிவாகிறது.
தொடரக்கூடாது என்று கீழறுப்புவேலைகளில் மோடி அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் அகழாய்வு பணி இயக்குநர் பு.சு.ஸ்ரீராமன்வெளியிட்டுள்ள அறிக்கையாகும். முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ அல்லது தொடர்புடைய எவ்வித கூறுகளோ மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட ஆய்வில் கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருப்பதன் மூலம் ஆய்வினை தொடர்வதற்கு மத்திய அரசு விரும்பவில்ல

நான்காவது கட்ட அகழாய்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும் என்று ஸ்ரீராமன்
கூறினாலும் இம்மாதம் 30ஆம் தேதியுடன் மூன்றாவது கட்ட ஆய்வுப்பணி முடியும்
நிலையில் கீழடி அகழாய்வை முடித்துவிட அவர் முனைப்புக்காட்டுகிறார் என்பது
தெளிவாகிறது.தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் மட்டுமின்றிஇந்திய தொன்மை
வரலாற்றுக்கே இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும் இது.
ஆர்வத்தோடும், உண்மையான வரலாற்றை வெளிக்கொணரஎன்ற மெய்யான அக்கறையோடும் ஆய்வுப்பணியை மேற்கொண்டு வந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமுக்கு மாற்றியதிலிருந்தே ஒற்றைப் பண்பாட்டை திணிக்க முயலும் மத்திய ஆட்சியாளர்களின் வன்மம் வெளிப்பட்டது.
ஸ்ரீராமனை இவர்கள் நியமித்ததே புதிதாக குழிகளைத் தோண்டி அகழாய்வுகளை நடத்த அல்ல. மாறாக தமிழர்களின் ஆதி நாகரிகத்தின் சாட்சியமாக விளங்கும் கீழடியை குழிதோண்டி புதைத்துவிடத்தான் என்பது அவரது அணுகுமுறையிலிருந்தே வெளிப்பட்டது. மோடி ஆட்சி கொடுத்த வேலையை அவர் கச்சிதமாக முடித்திருக்கிறார்.கீழடி போன்று இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடத்தப்பட்ட அகழாய்விலும் தொல் வரலாற்றை இணைக்கும் பலபொருள்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் ஒருங்கிணைந்த, விரிவான ஆய்வை மத்திய அரசோடு இணைந்து நடத்த முனைந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்களுக்கு நாற்காலியை தக்கவைத்துக் கொண்டு கொள்ளையைத் தொடர மோடியிடம் சரணாகதி அடையவே நேரம் சரியாக இருக்கிறது. கொல்லைப்புற வழியாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆளுநர், சபாநாயகர் எல்லோரும் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால் கண்முன்னால் தமிழர்களின் நாகரிக வரலாறு குழிதோண்டி புதைக்கப்படுகிறது. காவிரி, நீட்தேர்வு என தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளின் வரிசையில் கீழடியும் சேர்க்கப்படுகிறது. ஆனால் இதை எளிதாக விட்டுவிடக்கூடாது. மிகப்பெரியகிளர்ச்சியை நடத்தி கீழடியில் புதைந்துகிடக்கும் முழு உண்மையையும் வெளிக்கொணர வேண்டும். இதுவொரு வரலாற்றுக் கடமை. இந்த கடமையை நிறைவேற்ற தவறினால் வருங்கால வரலாறு இக்காலத் தமிழர்களை மன்னிக்காது. மண்மூடிக்கிடக்கும் வரலாற்றை மறைக்க முயலும் போது கண்மூடி இருக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக