வெள்ளி, 1 செப்டம்பர், 2017

கமல் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அரசியல் பாடம்?

என் நிறம் காவி அல்ல!கோட்டைக்குப் புறப்படுவோம் என்று நேற்று ஆகஸ்டு 30 ஆம் தேதி கோவையில் இருந்து அழைப்பு விடுத்த நடிகர் கமல்ஹாசன், இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்திருக்கிறார். இதன் மூலம் அவரது அரசியல் நகர்வின் காய்களை வேகமாக நகர்த்தி வருகிறார் கமல்ஹாசன்.
நேற்றிரவு கேரளாவுக்குப் பயணமான கமல்ஹாசன் இன்று மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பகல் உணவு அருந்தினார். சில மணி நேரங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
முதல்வரை சந்திக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‘நான் திரு.பினராயி அவர்களிடம் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன். எனக்குத் தேவையான பாடங்களை இங்கிருந்து எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்’’ என்றார்.

பகலுணவோடு முதல்வரிடம் நீண்ட விவாதம் நடத்திய கமல் அதன் பின் செய்தியாளர்களைப் பார்த்தார். அப்போது ஒரு நிருபர், ‘உங்கள் நிறம் சிவப்பா?” என்று கேட்டார். அதாவது நீங்கள் கம்யூனிஸ்டா என்று கேட்டார்.
அதை சிரிப்புடன் எதிர்கொண்ட கமல், ‘’இந்தியாவின் அனைத்து நிறங்களையும் உடையவன் நான். ஆனால் காவி நிறத்தை அல்ல’’ என்று பஞ்ச் வைத்தார்.
சில மாதங்களுக்கும் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் பிரிவான ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கமலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது இந்தியாவின் அரசியல் நிலைமை பற்றி விவாதித்த கமல், மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இப்போது கேரள முதல்வரையே சந்தித்து ’பாடம்’ படித்திருக்கிறார். maalaimalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக