செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அர்ஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி!

இந்து மக்கள் கட்சி தலைவரான அர்ஜூன் சம்பத் மனைவி சுப்புரத்தினம் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரபரப்பு மனிதரான இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மனைவியின் பெயர் சுப்புரெத்தினம், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஓம்கார் பாலாஜி கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் பள்ளியில் படித்து வருகிறார். அரசுப்பள்ளி ஆசிரியையாக உள்ள சுப்புரெத்தினம் என்ன காரணத்திற்காக தற்கொலைக்கு முயன்றார் ஏதேனும் குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது இனிமேல்தான் தெரியவரும். மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக