செவ்வாய், 26 செப்டம்பர், 2017

KFC சிக்கனை எதிர்த்த திருமுருகன்! இதன் உள்மர்மம் என்ன?

Ilango Pichandy : KFC சிக்கனை எதிர்த்த திருமுருகன்!
திருமுருகன் நடத்திய போராட்டங்களின் மாய்மாலம்!
ஆஸ்திரேலிய போட்டி கம்பெனியிடம்
காசு வாங்கிக் கொண்டு செய்த புரட்சி!
------------------------------------------------------------------------------------------------
1) KFC என்பது வறுத்த கோழி இறைச்சியை விற்கும்
கடை ஆகும். KFC என்றால் கென்டகி வறுத்த கோழி
(Kentucky Fried Chicken) என்று பொருள். இந்நிறுவனத்தின்
தலைமைச் செயலகம் அமெரிக்காவில் உள்ளது.

2) உங்களுக்கு நினைவு இருக்கிறதா? 2013 ஜூலை மாதம்
முதல் தொடர்ச்சியாக மே 17 இயக்கம் நடத்திய
KFC எதிர்ப்புப் போராட்டம். திருமுருகன் தலைமையில்
கென்டகி வறுத்த கோழி இறைச்சிக் கடைகளை
முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
3) உலகத்தில் உள்ள மக்களின் துன்பத்திற்குக் காரணமே
KFC சிக்கன்தான் என்ற தொனியில் BAN KFC, NO NO KFC,
INDIANS ARE NOT FOOLS TO EAT KFC என்றெல்லாம் எங்கு
நோக்கினும் திருமுருகனின் பதாகைகள்! முகநூல்
முழுவதும் திருமுருகனின் KFC எதிர்ப்புக் கருத்துக்கள்.
"KFC உண்ணாதே! புற்றுநோயை வரவழைக்காதே"என்று
திடீர் டாக்டராக மாறினார் திருமுருகன்.
4) ஏன் இந்தப் போராட்டத்தை நடத்தினார், திருமுருகன்?
இதன் உள்மர்மம் என்ன? உண்மையில் KFC சிக்கனைச்
சாப்பிட்டால் புற்று நோய் வருமா? விடை காண்போம்!

5) வறுத்த கோழி இறைச்சி விற்பனையில்
அமெரிக்காவின் KFC நிறுவனம் சர்வதேச அளவில்
முன்னணியில் இருந்து வருகிறது. என்றாலும் இதற்குப்
போட்டியாகவும் சில நிறுவனங்கள் உண்டு. அவற்றுள்
ஆஸ்திரேலியாவில் உள்ள "COUNTRY FRIED CHICKEN" என்னும்
நிறுவனம் பிரபலமானது.
6) ஜாலி பேனர்ஜி என்பவர் ஒரு பெரு வணிகர். இவர்
2013இல் ஆஸ்திரேலியா சென்று, கண்ட்ரி ஃபிரைடு
சிக்கன் (CFC) நிறுவன அதிபரைச் சந்தித்துப் பேசி,
தென்னிந்தியா முழுவதுக்குமான CFC விற்பனை
உரிமையைப் பெற்றார். இதை அறிந்து கொண்ட
திருமுருகன் ஜாலி பேனர்ஜியை சந்தித்து, CFC
சிக்கனுக்கான விளம்பர வேலைகள் மொத்தத்தையும்
தென்னிந்தியா முழுமைக்குமாக தானே ஏற்றுக்
கொள்வதாக வேண்டினார். ஆங்கிலம், இந்தி
மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய
மொழிகளிலும் விளம்பரங்கள் அமையும்.
7) ஜாலி பேனர்ஜி திருமுருகனின் கோரிக்கையை ஏற்று,
விளம்பரப் பணிகளை திருமுருகனுக்கு வழங்கினார்.
உரிய ஒப்பந்தம் போடப்பட்டது. லட்சங்கள் கைமாறின.
8) இப்போது கவனியுங்கள். திருமுருகன் ஆஸ்திரேலிய
நிறுவனத்தின் (Country Fried Chicken) விளம்பரதாரர்.
இதன் போட்டி நிறுவனம் அமெரிக்க கென்டகி (KFC).
எனவே தன்னுடைய போட்டி நிறுவனத்தை எதிர்த்து,
சந்தையில் அதற்கு இருக்கும் மதிப்பைக் குறைக்க
வேண்டிய வணிகத் தேவை திருமுருகனுக்கு இருக்கிறது.
எனவேதான், போட்டி நிறுவனத்தை அழிக்க,
அமெரிக்க கென்டகி சிக்கன் புற்றுநோயை
உண்டாக்குகிறது என்று ஒரு கருத்து உருவாக்கம்
செய்தார். இதற்காகவே KFC கடைகளை முற்றுகை
இடும் போராட்டத்தை நடத்தினார்.
9) திருமுருகனின் இந்தப் போராட்டத்தில் ஏதேனும்
சமூக நன்மை உள்ளதா? ஒரு ரோமமும் இல்லை.
சொந்த சுயநல வணிக ஆதாயம் மட்டுமே உள்ளது.
10) திருமுருகனின் புரட்சிகர அறைகூவலை ஏற்று,
KFC கடைகளை முற்றுகையிட்ட அப்பாவி
இளைஞர்களுக்கு, திருமுருகன் தன் சொந்த வணிக
நலனுக்காகவே இப்படி மோசடி செய்தார் என்பது
தெரியுமா? இதுவரை தெரியாது. இனியாவது தெரிய
வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
11) திருமுருகனின் முன்னாள் கூட்டாளி திரு உமர்
அவர்களும் இந்த மோசடியை அம்பலப் படுத்தியுள்ளார்.
அவருடைய 400+ பக்க ஆவணத்தில், பக்கம்-394,
பத்தி-865இல் எமது குற்றச்சாட்டுகளை உறுதி
செய்கிறார். அதையும் வாசகர்கள் படிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அசைக்க முடியாத ஆதாரங்களுடன் திருமுருகனின்
பித்தலாட்டங்கள் தொடர்ந்து அம்பலமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக