சனி, 5 ஆகஸ்ட், 2017

ஆதிக்கசாதியினர் Sweeper என 20000 ரூபாய் பெற்றுகொண்டு 6000 ரூபாயை ஒடுக்கப்பட்ட சாதிக்கு ..

Divya Bharathi : துப்புரவு பணியாளர்களை தெருத் தெருவாக சென்று தமிழகம் முழுக்க சந்தித்து பாருங்கள். அப்போது தான் கள நிலவரம் புரியும். அதில் Bc mbc இருப்பதாக தொடர்ந்து கூறப்படட்டு வருகிறது. ஆம் உண்மை தான் யாரும் மறுக்க வில்லை. தங்கள் ஆதிக்கத்தை பயன்படுத்தி Sweeper என கிட்டதட்ட 20000ரூ சம்பளம் வரக் கூடிய அரசு பணியை பெற்றுக் கொண்டு வரும் ஆதிக்கத் சாதியினர், துப்புரவு பணி செய்வதில்லை. அந்த சம்பளத்திலிருந்து 6000 ரூபாயை ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த மக்களுக்கு அளித்து மேல் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, தங்களுக்கு பதில் ஆளாக அவர்களை தான் துப்புரவு பணி செய்ய வைக்கிறார்கள், அவர்கள் வேறு வேலை செய்து கொள்கிறார்கள். தமிழகம் முழுக்க துப்புரவு பணியில் இருக்கும் "பதில் ஆட்கள்" ஏதோ ஒரு Bc, Mbcன் sweeper என்கிற அரசு பணியை 5000, 6000 கூலிக்கு செய்து கொண்டு வருகிறார்கள் என்பதை களத்தில் இறங்கி தெரிந்து கொள்ளுங்கள். ஆதிக்க சாதியினரின் இந்த ஆதிக்கம், அயோக்கியத்தனமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக