சனி, 5 ஆகஸ்ட், 2017

மலையகத்தில் பத்தடிக்கு எட்டடியில் .. 200 ஆண்டுகளாக ஒரு பிக்பொக்ஸ் ஹிரோக்கள் ஹீரோயினிகள்

.எஸ்தர் நத்தானியல்: தூங்கும்முன் இப்பதிவை எழுத நினைக்கிறேன் முன்ன விட இப்போது அதிகம் சிந்தனை வருகிறது வயது போக போக ஞானம் வருவதுப் போல!!!
பிக் பொக்ஸ் லன்ச் பொக்ஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதேயில்லை ஆனால் அதன் கருத்து விவாதம் களத்தில் நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.
அண்ணன் கமல் அவர்களே ஒரே வீட்டில் ஒரே அறையில் நடப்பதை நீங்கள் கேமராவை வைத்து ரெடி கட் என்று கத்தி நடிக்க வைக்கிறீர்கள் .
பெண்களுக்கும் ஆண்களுக்கும் மேக்கப்போட்டு காட்டுகிறீர்கள்.
இங்கே இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள் கூட்டத்தில் எழுந்து வந்தவள் நான் சொல்கிறேன் ,இங்கே ஒரு கூட்டம் பிக்பொக்ஸ் ஹிரோக்கள் ஹீரோயினிகள் இருக்கிறார்கள் .
பத்தடி எட்டடி காம்பிராவில் எவ்வித அடிப்படை வசதீயின்றி ஒரே அறையில் உண்டு, குடித்து ,உறங்கி, புணர்ந்து, பிள்ளைப்பெற்று மருமகன் மாமா மாமி கூட்டத்தோடு வாழ்ந்து விடீயும் முன் எழுந்து தேயிலையை தேடி மலையேறும் கூட்டம் உண்டு .
கங்காணிக்கு புன்னகைத்து கணக்குப்பிள்ளைக்கு தலை வணங்கி சாதிப்பார்த்து தள்ளி வைப்பவனால் அவனோட எதுக்குப்பா வம்பு என்று மாற்று பாதை தேடி நடக்கும் இம்மக்களே உண்மையான ஊமையான பிக்பொக்ஸ் நாயகர்கள் .


இவர்களுக்கு எத்தனை பொக்சில் அரசு நன்றி சொல்லி அனுப்பி வைக்கிறது?? மட்டுமா உங்கள் தேசத்தில் தாராவியில் காமாத்தி புரத்தில் சேரியில் நிறைய பிக்பொக்ஸ் குடும்பங்கள் உண்மையாய் அல்லாடுகிறார்கள் முடிந்தால் அவர்களின் வாழ்வியலைத்தேடி மக்களின் ஆதரவூடன் விருது வழங்குங்கள் வெறுமனே இந்த முலாம் பூசிய நிகழ்ச்சிக்கு நாங்கள் பலிக்கடாக்கள் அல்லவே அல்ல பீத்த பொக்ஸ்!!<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக