செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை ஆளுநரை சந்திகிறார்கள் :

ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து தியானத்தில் ஈடுபட்டனர். தினகரனுடனான ஆலோசனைக்குப் பின்னர் மெரினா வந்து நினைவிடத்தில் ஈடுபட்டனர். 20 நிமிட ஆலோசனைக்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.வெற்றிவேல், எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன், ‘’ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து நாங்கள் நாளை முறையிடுவோம். சந்திக்க அனுமதி தந்தால் நாளை காளை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்கவுள்ளோம். ஆளுநரிடம் என்ன முறையிடப்போகிறோம் என்பதை முன்கூட்டியே சொல்வது முறையல்ல. ஆளுநருடான சந்திப்பிற்கு பின்னர்தான் முக்கிய முடிவை அறிவிப்போம்’’ என்று கூறினர்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக