திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கமலஹாசன் : கோமாளிக்குல்லா. போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா".

அதிமுகவின் இரு அணிகள் இன்று இணையும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு கோமாளிக் குல்லா போடும் அரசியல்வாதிகள்: கமல் ஹாசன் காரசாரமான கருத்து அதிமுகவின் இரு அணிகள் இன்று இணையும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா". என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன் ``விமர்சனங்கள் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து இருக்கக் கூடாது என கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கமல் ஹாசனின் இன்று வெளியிட்டுள்ள கருத்து தேசிய அரசியல் சார்ந்ததா? அல்லது தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பானதா? என்ற குழப்பத்தை உருவாக்கியுள்ளது. மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக