வியாழன், 31 ஆகஸ்ட், 2017

நீட் பேரழிவு ... அதிமுக வாங்கி தந்த செல்வம் ,,,

மார்ட்டின் சந்தர் கிங்: 1178 மதிப்பெண் எடுத்த எளிய குடும்பத்தைச் சார்ந்த பெண்ணுக்குக்கு கூட மருத்துவ இடம் கிடைக்கவில்லை.
இட ஒதுக்கீடுகள் காணமல் போகப் போகின்றன.
எங்கும் சிபிஎஸ்ஸி மயமாகப் போகிறது.
மாநகரம், பெருநகரங்களில் நீட் கோச்சிங் போனவர்களுக்கே டாக்டர் கல்வி சாத்தியமாகப் போகிறது.
இது மற்ற தொழிற்கல்வியிலும் பிரதிபலிக்கும்.
இதனால் பாதிக்கப்படுபவர்கள்??!!!!; எவர் என்பது தெரிந்ததே..
அதிமுக / பாஜக ஆதரவு என்ற உப்பை அநாவசியமாக வாரி வாரி தின்றவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டிய நேரமிது...
சிலர் ஆதங்கப்படுகிறார்கள்...நாங்கள் இந்த இயக்கங்களுக்கு ஓட்டளிக்காதவர்கள்; எங்களுக்கும் ஏன் இந்த தண்டனை என்கிறார்கள்..

நீங்கள் மற்ற கட்சிகளுக்கு ஓட்டளித்து இந்த இரு அணிகள் வெற்றி பெற மறைமுகமாக ஆதரவளித்தவர்கள்... ஆக உங்களுக்கும் அதிமுக/பாஜக அரியனை ஏறியதில் பங்கிருக்கிறது... அனுபவியுங்கள்..
திமுகவினர் சொல்கிறார்கள்...நாங்கள் சரியாகத்தானே சமூகநீதிக்காக ஓட்டுப் போட்டோம். எங்களுக்கும் ஏன் இந்த நிலை??
ஜனநாயகம் பற்றித் தெரிந்தும், நீங்கள் திமுகவின் அரிய பல திட்டங்களை உங்கள் பக்கத்து வீடுகளுக்கு போதிக்கவில்லை....
அதான்... அனுபவியுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக