வியாழன், 31 ஆகஸ்ட், 2017

92 வயதில் சுடுகாட்டுபாதை கேட்கும் ... இந்த சாதியசமூகத்தையும், மானங்கெட்ட அரசுகளையும் எதைக்கொண்டு அடிப்பது......

juliet.jenifar:படத்தில் இருப்பவர் வன்னிய சாதிவெறியர்களால் சூரையாடப்பட்ட நல்லூர் கிராமத்தைச்சேர்ந்த செல்வராசு,வயது 92.
நாங்கள் சென்றிருந்தபோது எங்களிடம் பேசினார்.பாதிப்புக்குள்ளான இவர் அப்படி என்ன கேட்டுவிடப்போகிறார்?
பணம்,சட்ட வேஷ்டி,அல்லது தீக்கிரையான வீடுகளை புனரமைப்பதற்கான உதவி இதுதானே என்று நினைத்திருந்த எங்களிடம் அவர் கேட்டது...??
ஐயா இந்த ஊர்ல என் காலந்தொட்டே சுடுகாட்டுப்பாதை இல்லைங்க.
இதுக்கு ஒரு வழி பன்னுனா உங்களுக்கு புன்னியமா போகுங்க.
என்னோட சாவுக்குள்ளயாவது இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கனும்க, இல்ல என்னோட பேரபுள்ளைங்களும் இதுபோல கஷ்டத்த அனுபவிக்க கூடாது சாமி..என அந்த வயதான பெரியவர் சொல்வதைக் கேட்டு அதிர்ந்துபோனோம்.
தன்னுடைய இந்த தள்ளாத வயதில் பென்ஷன் பணத்தைப்பற்றியும்,அரசின் மருத்துவ உதவிகளையும் கேட்க வேண்டிய இந்த பெரியவரை,
தன்னுடைய அடுத்த தலைமுறைக்காவது சுடுகாட்டுப்பாதை வேண்டும் என்று கேட்கவைத்திருக்கூடிய இந்த சாதியசமூகத்தையும்,
மானங்கெட்ட அரசுகளையும் எதைக்கொண்டு அடிப்பது......? Tnx: frm wp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக