வியாழன், 3 ஆகஸ்ட், 2017

திவ்யா பாரதியின் உயிருக்கு ஆபத்து !உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்து விசாரணை செய்யவேண்டும்!


ஒருபுறம்,
தமிழகத்தில் அரசியல்
பெண் செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம் முதல் ஆட் கடத்தல் வழக்குகள் வரை , பினாமி பாஜக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் தொடுத்துக் கொண்டிருக்கின்றது.

மறுபுறத்தில், பாஜக வுடன் கூட்டு சேரும் போதையில் உள்ள PT கிருஸ்ணசாமியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களாக பாலியல் வக்கிரத்துடன் கொலை மிரட்டல்களை தொலைபேசியிலும், முகநூலிலும் திவ்யாவிற்கு விடுத்து வருகின்றனர். இது வெறுமனே Character assassination என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
எந்த தூய்மைப் பணியாளர்களுக்காக உரிமைக்குரலை #கக்கூஸ் திவ்யா எழுப்பினரோ, அவர்களையே கடத்தியதாக தமிழக காவல்துறையே பொய் வழக்குப் போடும் என்றால்... "கூலிப் படை வைத்து என்னைக் கொலை செய்து விடுவார்கள்" என திவ்யா அச்சப்படுவதில் முழுமையான நியாயம் இருக்கிறது.

திவ்யா பாரதி பிரபலமான #கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் மட்டுமல்ல, ஒரு வழக்கறிஞரும் கூட.
உச்சநீதிமன்ற மதுரைக் கிளை உடனடியாகத் தலையிடுவது அவசியம்!
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஆபாச & கொலை மிரட்டல் விடுத்த அவரது தொண்டர்கள், சித்திரைச் செல்வி & அவரது கணவர், ஆட் கடத்தல் பொய் வழக்குப் போட்டுள்ள காவல்துறை அனைவரையும் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்.
#திவ்யா_பாரதியின் உயிருக்கும் செயற்பாட்டுக்கும் பாதுகாப்பு தர வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக