வியாழன், 3 ஆகஸ்ட், 2017

டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்துத்வா பிரசாரம்

marx.anthonisamy: கிருஷ்ணசாமியின் சமீபத்திய நகர்வுகளை, "ஒடுக்கப்பட்ட சமூகம் தன் மீது சுமத்தப்பட்ட சாதீய இழிவுகளைக் களையும் ஆவேசம்" என்கிற ரீதியில் சிலர் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் இன்னொரு பக்கமாக ஆவணப் படம் எடுத்த திவ்யா மீது இவரது ஆட்கள் ஏவும் ஆபாசத் தாக்குதல்களையும் அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் உண்டு என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். கிருஷ்ணசாமியின் இந்த நகர்வு அப்பட்டமாக பா.ஜ.கவை, இந்துத்துவத்தை, பாசிசத்தை நோக்கிய நகர்வு என்பதுதான் அது.
நீட் தேர்வை ஆதரித்து போராட்டம் நடத்தி மோடி - அமித்ஷா கும்பலை குளிரூட்டப் போகிறாராம்.
"போராட்டம்" அறிவித்துள்ளார்.
யாரை எதிர்த்து இந்தப் போராட்டம்?
ஒட்டுமொத்தமான தமிழ் மக்களை எதிர்த்து.
மருத்துவப் படிப்பின் தரம் குறைந்து விட்டதாம். இந்தக் காரணத்தைச் சொல்லித்தான் இப்போது இவர் எந்த வாலைப் பிடித்துத் தொங்குகிறாரோ அந்த வாலுக்குரிய ஆர்.எஸ்.எஸ் இட ஒதுக்கீட்டையே எதிர்க்கிறது.
இனி கிருஷ்ணசாமி 'மெரிட்'டின் பெயரால் இட ஒதுக்கீட்டையும் எதிர்ப்பாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக