திங்கள், 31 ஜூலை, 2017

தேவேந்திர சமுகத்தின் பெயரில் ஆர்எஸ்எஸ் பாஜக! ,,, தோழர் திவ்யா மீது கிருஷ்ணசாமி வழக்கு ...

கக்கூஸ் ஆவணபட இயக்குனர் தோழர் திவ்யாபாரதி தேவேந்திரர்களை மலம் அள்ளுகிறார்கள் என்று கொச்சைபடுத்தி விட்டார் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
டாக்டர் கிருஷ்ணசாமி கூறியது முதல் தொடர்ந்து தோழர் திவ்யாபாரதிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் ,அவதூறு பேச்சு போன்றவை மூலமாக மன ஊலச்சலை தருவதாக சொல்கிறார்.
தோழர் திவ்யாபாரதியை அவதூறாக பேசியதும் மிரட்டயதும் கண்டனத்துக்குரிய செயல் ஆனால் தேவேந்திரர்கள் என்று அடையாளப்படுத்திக் கொன்டு தோழர் திவ்யாரதியை மிரட்டயவர்கள் எல்லாம் தேவேந்திர சமுத்தை சார்ந்தவர்களா என்பது சந்தேகத்துக்குரியது. புதியதமிழகம் பாஜகவுடன் இணைந்ததில் இருந்து டாக்டர் கிருஷ்ணசாமி ஒவ்வொரு செயல்களுக்கும் பின்னால் இருந்து ஆர்எஸ்எஸ் பாஜக இயக்குகிறது.
தேவேந்திர சமுகத்தின் மீது ஜாதிய வக்கிரமானவர்கள் , பெண்ணிய பார்வை , சமுகபார்வையற்ற காட்டுமிராண்டிகள் என்று வெகுஜனங்களின் தவறான பார்வைக்கு வரவேன்டும் என்ற நோக்கத்தோடு ஆர்எஸ்எஸ் பாஜகவின் வளைதளக்குழு திட்டமிட்டு செயல்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமுகங்களில் ஒன்றான தேவேந்திரர் சமுத்தின் மீது வன்மத்தோடு ஆர்எஸ்எஸ் பாஜகவால் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறும் கண்டிக்கதக்கது.

டாக்டர் கிருஷ்ணசாமி உண்மையான சமுகபற்றோடு செயல்பட கூடியவர் என்றால் இதனை தடுக்க முயற்சிக்க வேன்டும் விளக்கம் அளிக்க வேன்டும் .
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்ய தவறினால் அவர் மீது தோழர் திவ்யாபாரதி வழக்கும் தொடரலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக