திங்கள், 31 ஜூலை, 2017

காஸ் சிலிண்டர் மானியம் ரத்து .. ஃபிரிட்ஜ் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை:

உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் வெளியீடு! பொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
* வருமான வரி செலுத்தக்கூடிய ஒரு நபரைக்கொண்ட குடும்பத்திற்கும், தொழில் வரி செலுத்துபவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பத்திற்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.
 * மத்திய, மாநில அரசு ஊழியர்களூக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.
 * குளிர்சாதனப்பெட்டி வைத்திருக்கும் குடும்பத்தினருக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.
 * ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.
 * 3 அறைகளுக்கு மேல் வீடுகளை வைத்திருப்போருக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.
* நான்கு சக்கர மோட்டார் வாகனம் வைத்துள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.
 * 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.
 * ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை.

 * நகர்புறம் - அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் உண்டு
. * வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை
. * விதவை, திருமணம் ஆகாத பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பத்தினருக்கு பொருட்கள் உண்டு.
 * நகர்புறம் - வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களூக்கு ரேஷன் பொருட்கள் உண்டு.
 * நகர்புறம் - முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் போன்ற பயனாளிகளுக்கு பொருட்கள் உண்டு.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக