ஞாயிறு, 16 ஜூலை, 2017

காமராஜரின் கல்விச் சாதனை ராஜாஜியை வெறுப்பேற்றியது ... ராஜாஜி மூடிய பள்ளிகளின் எண்ணிக்கை 8500 !

ஸ்டாலின் தி :காமராஜர் ஏன் கொண்டாடப்படுகிறார்?
திராவிட ஆட்சிகளின் மீதான சலிப்பும் கோபமும் மட்டும் காமராஜரைக் கொண்டாட காரணம் இல்லை. ராஜாஜி எனும் ராஜாகோபாலச்சாரி என்கிற பார்ப்பனர் தமது மகாண ஆட்சிகாலத்தில் பள்ளிகளை மூடிக் கொண்டிருந்தார். அவர் அப்படி மூடிய பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் 8500.
பார்ப்பானுக்கு நிகராக மற்றவரும் கல்வி பெறக்கூடாது என்கிற சனாதன மனோபாவம் தான் அது.பள்ளியை மூடியதோடு இல்லாமல் இருக்கும் பள்ளிகளில் குலத்தொழிலை பயிற்றுவிக்கவும் விரும்பினார் ஆச்சாரி.காங்கிரஸ் மற்றும் திராவிட இய க்க பார்ப்பனரல்லாதார் முயற்சியால் ஆச்சாரியை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆட்சியேறிய காமராஜர் பள்ளிகளை திறப்பதையே தமது அடையாளப் பணியாக மாற்றினார்.
அவர் முதல்வராக பதவி ஏற்கும் போது 450 ஆக இருந்த உயர் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை, அவர் ஆட்சி காலத்தில் 2200 ஆக உயர்ந்தது. 3.5 இலட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 13 இலட்சமாக உயர்ந்தது. அதுபோலவே 16000 ஆக இருந்த துவக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 30000 ஆக உயர்ந்தது. 16 இலட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 48 இலட்சமாக உயர்ந்தது. அவர் பரவலாக கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்திற்குப் பிறகு வெறும் 7 சதவீதமாக இருந்த மாணவர் வருகை 37 சதவீதமாக உயர்ந்தது.

தாத்தா இரட்டைமலை சீனிவாசனாரின் பேரனான பரமேஸ்வரன் அவர்களை இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமித்து, இந்து சனாதானிகளை திகைக்க வைத்தார். தியாகி கக்கன்ஜி அவர்களை உள்துறை அமைச்சராக நியமித்து சூத்திர ஆதிக்கக் கும்பலுக்கு எரிச்சலையும் கொடுத்தார். இதுபோன்ற எளிய மக்களின் உணர்வுகளில் நெருங்கி வந்ததால்தான் அவர் இன்னமும் போற்றப்படுகிறார்.
காமராஜர் காங்கிரஸ்காரர்தான். ஆனால் அவருக்கும் ஆச்சாரிகளுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக