ஞாயிறு, 16 ஜூலை, 2017

பன்னீர்செல்வம் 40 ஏக்கள் நிலத்தை கிராம மக்களிடம் விற்கிறார் ... ஒரு டீக்கடை பன்னீருக்கு யோகம்தான்


பெரியகுளம்:தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனைவிக்கு சொந்தமான 40 ஏக்கர் விளைநிலத்தை ரூ.௬ கோடிக்கு வாங்க கிராம கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சுமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்ட மூன்று கிணறுகளும் வறண்டுவிட்டதால், ஒன்றரை மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஊராட்சியின் குடிநீர் கிணறுக்கு அருகில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழமாக கிணறு வெட்டியதால், ஊராட்சிக்கு சொந்தமான கிணறு வறண்டு போனதாக புகார் எழுந்தது.


அந்த கிணற்றை, லட்சுமிபுரம் ஊராட்சி பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராமத்தினர் ஜூன் 22 முதல் ஜூலை 13 வரை தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.தேனியில் ஜூலை 13 இரவில் கலெக்டர் வெங்கடாசலம், பாஸ்கரன் எஸ்.பி., முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம், கிராம கமிட்டி நிர்வாகிகளுடன் பேசினார்.

'கிராமத்தின் குடிநீருக்காக தங்களுக்கு சொந்தமான கிணற்றை 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று காலை அக்கிணற்றில் இருந்து ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் இணைப்பு கொடுக்கப்பட்டது. பின், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயபாலன், கிராம கமிட்டி தலைவர் கார்த்திகேயனிடம் கிணறு மோட்டார் அறையின் சாவியை பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, ஒப்படைத்தார்.

இந்நிலையில், லட்சுமிபுரத்தில் நேற்றிரவு கிராம கமிட்டி கூட்டம் நடந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 40 ஏக்கர் விளைநிலத்தை மக்களின் பங்களிப்போடு ரூ.6 கோடி கொடுத்து வாங்குவது எனவும், தங்களின் கோரிக்கையை ஏற்று கிணற்றில் இருந்து குடிநீர் வழங்கிய ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக