புதன், 28 ஜூன், 2017

Shahjahanr: மாற்று கருத்துக்களை கண்ணியத்தோடு சொல்லுங்க .. . சதிவலைகளில் சிக்கி விடாதீர்கள்

 இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது.
மாற்றுக்கருத்துகளை வைக்கும்போது நாகரிகமான முறையில் பேசுங்கள். கண்ணியமான சொற்களைப் பயன்படுத்துங்கள்.
ராமநாதபுரத்தில் கலவரம் ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடனேயே சங்கிகள் சில வதந்திகளை கட்டவிழ்த்து விட்டார்கள். அஸ்வின் குமாரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்கியதாக கேடி ராகவன் எழுதிய பதிவுக்கு ஆயிரக்கணக்கில் லைக். ஆரம்பத்தில் முஸ்லிம்களை ஆபாசமாகத் திட்டி ஏகப்பட்ட கமென்ட்கள் எழுதியிருக்கிறார்கள் சங்கிகள்.
பிற்பாடு உண்மை வெளியாகி, அஸ்வின் குமாரைத் தாக்கியவர்கள் இந்துக்கள்தான், முன்விரோதம்தான் காரணம் என்று தெரிந்த பிறகு, சங்கிகள் மாயமாகி விட்டார்கள். முஸ்லிம்கள் பலர் அந்தப் பதிவில் கமென்ட் செய்திருக்கிறார்கள். அவற்றில் பல கமென்ட்கள் மிக ஆபாசமானவை, அருவருப்பானவை.

மதவெறி பிடித்த சங்கிகள் ஆபாசமாக எழுதுவது இயல்பு. அவர்களுடைய நோக்கமே வெறுப்பையும் கலவரத்தையும் தூண்டுவது, நல்லிணக்கத்தைக் குலைப்பதுதான். ஆனால், அமைதி மார்க்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் இப்படி எழுதலாமா?
காரணமே இல்லாமல் குற்றம் சாட்டப்படும்போது பதற்றப்படுவது இயல்பு. ஆனால் பதற்றத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடக் கூடாது. சொல்லப்போனால், அவர்கள் விரிக்கிற வலையில் போய் விழுகிறார்கள்.
இஸ்லாமியர்கள் தமது நண்பர்கள் யாரேனும் இப்படி ஆபாசமாக எழுதுவதைக் கண்டால் திருத்துங்கள், கண்டியுங்கள். திருந்தாவிட்டால் நட்பிலிருந்து நீக்கி விடுங்கள். இவர்கள்தான் இஸ்லாத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் புல்லுருவிகள். இவர்களைத் திருத்தாமல் விடுவதால் நீங்கள்தான் அவர்களுக்கும் சேர்த்து சிலுவைகளை சுமக்கிறீர்கள். தேவையற்ற சுமையை இறக்கி விடுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக