ஞாயிறு, 11 ஜூன், 2017

பதஞ்சலி அரிசி மட்டும்தாய்ன் உண்மயான அரிசி மற்றவை பிளாஸ்டிக்? ... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாப்பு குமாரா?

Surya Xavier :ப்ளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்யும் செலவை விட
நல்ல அரிசியை உற்பத்தி செய்யும் செலவு குறைவு என்ற விபரம் தெரியாதவனுக்குச் சொல்லுங்கள் உங்கள் செய்தியை.
திடீரென அரிசி மேல் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாசத்திற்கு காரணம் என்ன? பதஞ்சலி அரிசியின் மீதான பாசத்தினாலா? பதஞ்சலி விற்பனை செய்யும் பொருள்களில் அரிசியை இந்த ஆண்டு அதிகமாக விற்க இலக்கு தீர்மானித்த செய்தியை ஏன் உங்கள் ஊடகங்கள் சொல்லவில்லை? ப்ளாஸ்டிக் அரிசி சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்டு இங்கு கலக்கப்படுகிறது என்ற செய்திக்கு இந்திய அரசின் அதிகாரபூர்வ விளக்கம் என்ன? தனியார் பால் ரசாயணம் கலந்தது என்று தமிழக மந்திரி சொன்னது போல் நெஸ்லேயின் நூடுல்ஸ் ரசாயணமிக்கது என்று சொன்னதைப் போல் ப்ளாஸ்டிக் அரிசி குறித்து மத்திய உணவு அமைச்சர் அறிக்கை ஏதும் உண்டா?கோ டூ பதஞ்சலி வெப் சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக