ஞாயிறு, 11 ஜூன், 2017

இந்தியா மதசார்ப்பு அற்ற நாடு! அதான் நவாஸ் செரீப்பை கட்டிபிடித்து போஸ் கொடுக்கிரோம்ல ? .. உலகை ஏமாற்ற கட்டிப்பிடி நாடகம்!

மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் . அந்த நாட்டின் பண்பாட்டின் படி வேசம் கட்டி ஆடுவதைப் பார்த்து நாம் நகைப்பு தெரிவிக்கிறோம். ஆனால் இந்தக் காரியக்கார கோமாளி அதை திட்டமிட்டே செய்கிறார்
ஏனெனில் உலக நாடுகளின் பார்வையில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பல்வேறு தேசிய இனங்கள்-மதங்கள்-பண்பாடுகளைக் கொண்ட நாடு. இந்தப் பன்முகத் தன்மைக்கே உலக அரங்கில் இந்தியாவிற்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. அந்த தேசத்தின் பிரதமர் என்ற முறையில் மோடி தானும் அதன் பிரதிபலிப்பாகவே இருப்பதாக உலகை நம்ப வைக்கும் நாடகமே இந்த நடிப்பெல்லாம். இவர்களது ஒற்றைக் கலாச்சாரக் கோட்பாட்டை எந்த நாட்டிலாவது சென்று இவர் பேச முடியாது
பேசுனா காறித்துப்பி போடான்னு சொல்லிருவானுக. உள்ளூரில் வில்லன். உலகிற்கு கதாநாயகன். 49 நாடுகளின் சுற்றுப்பயணத்தில் மோடி பேசிய பேச்சின் சாரம் எது தெரியுமா?. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதே.. தனது சொந்தக் கொள்கையை சொல்லத் தைரியமில்லாத. முட்டுச் சந்தில் முட்டி நிற்கும் கோமாளிகள்..
Surya Xavier

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக