வெள்ளி, 16 ஜூன், 2017

கூவத்தூர்: சிடியுடன் சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலின்!

கூவத்தூர் பண விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ சரவணன் பேசியதாக வெளியான வீடியோ விவகாரம் தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறியும் சட்டசபையில் அது குறித்து பேச அனுமதிக்காகததால், அதற்கு கண்டனம் தெரிவித்து 3வது நாளாக தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,:ஆதாரத்தை கையில் வைத்திருக்கிறேன் தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்துள்ள அந்த காட்சிகள் இந்த சிடியில் உள்ளது. ஆகவே இதை நீங்கள் இப்போது அனுமதிக்கிறிர்களா, இங்கு அவையில் நான் தருவதற்கு தயாராக இருக்கிறேன். இல்லையென்றால் உங்கள் அறையில் வந்து தருகிறேன் பின் நாளை இதை எடுத்து விவாதம் செய்ய அனுமதி தருகிறிர்களா? என்று கேட்டதற்கு அதலாம் முடியாது இப்படியெல்லாம் என்னிடத்திலே பேசக்கூடாது. இவையெல்லாம் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று அவர் ஒரு உத்தரவை போடுகிறார்.


நேற்று அவர் சொன்ன அடிப்படையில் தான் இன்று நான் ஆதாரத்துடன் வந்தேன். ஆனால் இன்று அந்த ஆதாரத்தை கையிலே வைத்திருக்கும் போது அதைப்பற்றி பேசக்கூடாது, இது சபைக்குறிப்பில் இடம் பெறாது என்று தீர்ப்பு தருகிறார் என்றால் இதற்கு பிறகு  சட்டமன்றத்திலே எப்படி ஜனநாயகத்தை நாங்கள் எதிர்பார்க்க முடியும். ஆகவே அதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. />இதிலிருந்து என்ன தெளிவாக தெரிகிறது என்றால் தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்திகள் நூற்றுக்கு நூர் உண்மை. ஆகவே பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு குதிரை பேரம் நடைபெற்று, அந்த அடிப்படையில் தான் இப்பொழுது எடப்பாடி தலைமையிலே அதிமுகவின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம். தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பேசிய துரைமுருகன் கூறியதாவது,

சபையில் ஆதாரம் இருந்தால் தான் பேச வேண்டும் என்று நேற்று தெரிவித்தார். இன்று ஆதாரத்தை கையில் வைத்திருக்கிறேன். அதை இங்கே பெற்றக்கொள்கிறிர்களா இல்லை அறையில் வந்து கொடுக்கவா என கேட்டதற்கு, அறையில் வந்து கொடுக்க சொன்னார். என் அறையில் வந்து கொடுங்கள் நான் பார்கிறேன். பார்த்த பிறகு தேவைப்பட்டால் அனுமதி தருவேன் இல்லை மறுப்பேன் அது என்னுடைய அதிகாரம் என்றார். நாங்களும் ஒத்துக்கொண்டோம். உடனே அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் என கூறினார். அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது நியாயம்தானா என கேட்டோம். பின்னர் சபைக்குறிப்பில் இருக்கட்டும் என்றார்.

உடனே அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நான் சென்னேன் சபாநாயகர் தீர்ப்பு  சென்னதற்கு பிறகு மந்திராயக இருந்தாலும் சரி முதலமைச்சராக இருந்தாலும் சரி அதில் தலையிடக்கூடாது. அவர் தலையிட்டது கூட ஆச்சரியம் இல்லை. அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு மறுபடியும் நான் சபைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்று அந்தர் பல்டி அடிக்கிறார். எதிர்கட்சித் தலைவர் பொறுமையாக இருந்து பதிலை கேட்கிறார். ஆனால் சபாநாயகர் இப்படி சர்வாதிகாரியாக செயல்படுவதை கண்டித்து தான் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்./>படங்கள் - ஸ்டாலின்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக