வெள்ளி, 16 ஜூன், 2017

எண்ணூர் ஆற்றின் 1090 ஏக்கரை ஆக்கிரமித்த மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள்!

சென்னை அடுத்துள்ள எண்ணூர் பகுதிகளில் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற இதுநாள் வரை வெளியிடப்படாத கடற்கரை ஒழுங்கு முறை அறிவிப்பாணையின் (CRZ) வரைப்படத்தின் படி எண்ணூர் ஆற்றின் 8000ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மத்திய மாநில அரசின் பொது துறை நிறுவனங்களை சோர்ந்த பல்வேறு நிறுவனங்கள் எந்த ஒரு  மேம்பாட்டுக்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களில் 1090 ஏக்கரை ஆக்கிரமித்திருக்கிறது.
1991, 2011 ஆகிய ஆண்டுகளில் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையின் கொண்டு வந்த விதிகளை பின்பற்றி இருப்பின் எண்ணூர் பகுதிகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள் கட்டப்பட்டு இருக்க கூடாது.

கடற்கரை ஒழுங்கு முறை அறிவிப்பாணையின் படி அதன் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களையும், மாநில மற்றும் மாவட்ட கடற்கரை மேம்பாட்டு குழுமங்களின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் மற்றும் வரைப்படத்தின் அடிப்படையில் தான் மதிப்பிட வேண்டும்.

ஆனால் ஆர்டிஐ சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் தங்களிடம் எண்ணூர் ஆற்றின் அங்கிகரீக்கப்பட்ட வரைபடம் இல்லை என திருவள்ளுவர் மாவட்ட மற்றும் மாநில கடற்கரை மேம்பாட்டு குழுமங்கள் கூறியிருக்கிறது. இதுவரையில் திட்ட அனுமதிக்கு திட்டத்தை முன்மொழியும் நபர்கள் தந்த வரைப்படங்கள் அடிப்படையாக வைத்து மட்டுமே அனுமதி தரப்பட்டு வந்திருக்கிறது.இது தொடர்பாக இன்று சென்னை பிரஸ் கிளப்பில் நடத்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன்,தேசிய பசுமை தீர்பாயத்தின் முன்னாள் நீதிபதி நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அவர்கள் பேசுகையில்,

"எண்ணூர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக கனமழையாலும், புயலாலும் ஏற்படும் வெள்ள அபாயங்கள் அதிகரித்து இருக்கின்றன. இதனால் சென்னை நகரின் நீர் ஆதாரங்களில் கடல் நீர் ஊடுருவல்களும் அதிகரித்திருக்கிறது. பொன்னேரி, மாதவரம், ஆர்.கே.நகர், திருவெற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் பகுதிகளில் அபாயத்தில் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்களான காமராஜர் துறைமுகம், பீபிசிஎல், எச்பி கேஸ், எல்டி போர்ட், பாரத் மற்றும் ஹந்துஸ்தான் பெட்ரோலியம், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் ஆக்கிரமித்து இருக்கிறது.

மேலும் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி சாம்பல்கள் தொடர்ந்து ஆற்றில் கொட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆக்கிரம்புகளை அகற்ற கோரி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள் தரப்பிலும் இது குறித்து நல்ல முடிவுகள் விரைந்து எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கிறோம் என்றார்கள்.

மத்திய மாநில அரசுகளே நிலங்களை ஆக்கிரமிக்ககூடாது என்பதற்கான சட்டங்களை வகுத்து விட்டு தற்போது அவர்களின் பொதுத் துறை நிறுவனங்கள ஆக்கிரமிப்ப எந்த அடிப்படையில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றங்களில் ஆக்கிமிப்பு தொடர்பான வழக்குகள் வரும் போது சிறிய அளவில் குடிசகைள் இருந்தாலும் அகற்ற உத்தரவிடும் நிலையில் அரசின் நிறுவனங்ளே ஆக்கிரமித்திருப்பது மக்கள் மத்தியில் மிக பெரிய கேள்வியாக எழுகிறது.

- சி.ஜீவா பாரதி  நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக