வெள்ளி, 16 ஜூன், 2017

நம்மாழ்வார் வைகையறா .... முட்டாள் அல்லது பிராடு ... எது?


Don Ashok :நீங்கள் மதிக்கும் ஒருவர் உங்களுக்கு நிறைய conspiracy theoryகளை சொல்கிறார். பெருகிவரும் விஞ்ஞான, உணவுப்பழக்க மாற்றத்தில் உங்களின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் அல்லது போதுமான அளவிற்கு விடையை தேடாமல் நீங்கள் அலைபாயும் சூழலில் அவரது 'theory'கள் உங்களுக்கு திருப்தியை தருகின்றது. அவரது தியரிகள் எதுவுமே விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாதவை என்றாலும் அதெல்லாம் உணர்வுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது. அனைத்தையும் நம்புகிறீகள். மூலிகை சிகாமணி, யுனானி யுகபுருசர், சிவராஜ் சித்தவைத்தியர் வரிசையில் எந்த ஒழுங்கான படிப்பறிவும் இல்லாத அவரை இயற்கை விஞ்ஞானி, வேளாண் விஞ்ஞானி என்றெல்லாம் போற்றுகிறீர்கள். அவரும் அறிவியலை தன் பேச்சிலெல்லாம் அடித்து நொறுக்குகிறார். நிற்க.
அதே ஆள் பஞ்சகவ்யம் என்ற தியரியையும் சொல்கிறார். அதாவது சாணி, நெய், தயிர், பால், மூத்திரம் ஆகியவற்றைக் கலந்து தினமும் சாப்பிட்டால்/குடித்தால் எய்ட்ஸ் கூட குணமாகும் எனச் சொல்கிறார். இது எளிதாக கடந்துவிடக்கூடிய சாதாரண பொய்யோ/முட்டாள்தனமோ அல்ல. மகா மகா மகா மகா பெரிய பொய்/முட்டாள்தனம். உங்கள் அப்பா இப்படி ஒன்றைச் சொன்னால் கூட அப்பாவை மனநல மருத்துவரிடம் தான் அழைத்துச் செல்வீர்களேயொழிய, அப்பா சொன்னார் என்ற காரணத்துக்காக சாணியை நக்கிப் பார்க்க மாட்டீர்கள். எந்த ஒரு உயிரினத்தின் கழிவுகளை தின்பது ஒருவித மனவியாதி. அதை மாட்டுமூத்திரத்தை விரும்பி அருந்தும் இந்துத்துவா ஆட்களின் செயல்பாடுகள், டிவி பேட்டிகள் போன்றவற்றை பார்ப்பதில் இருந்தே உணர்ந்திருப்பீர்கள்.

ஆக அந்த ஆளின் இந்த அசாதாரண பொய்/உளறல் தோன்றிய அதே மூளையில் தான் அறிவியலுக்கு எதிரான அவரது அத்தனை தியரிகளும் தோன்றி இருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இன்று பஞ்சகவ்ய விஞ்ஞானியின் படத்தைப் போட்டு ஆர்கானிக் முட்டை, ஆர்கானிக் கோழி, ஆர்கானிக் காண்டம் என மக்களை முழுமுட்டாளாக்க பெரும்கொள்ளைக் கூட்டம் கிளம்பியுள்ளது. அதைவிட கொடுமை அந்தக் கூட்டம் ஆர்கானிக் திங்கவில்லை என்றால் புற்றுநோய் வரும், ரத்தம் கக்கிச் சாவீர்கள் என்றெல்லாம் மக்களை ப்ளாக்மெய்ல் செய்து தன் பொருட்களை அநியாய விலைக்கு விற்கிறது. அதென்ன ஆர்கானிக் முட்டை? ஆர்கானிக் தீனி போட்டு வளர்க்கும் கோழி போடும் முட்டை ஆர்கானிக் முட்டை என்றால், ஆர்கானிக் உணவு சாப்பிடும் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை ஆர்கானிக் குழந்தையா? அது ரத்தம் என்ன பச்சையாக இருக்குமா? எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது? இந்த ஏகபோக அயோக்கியர்களின் அம்பாசிடராகத்தான் இன்று நம்மாழ்வார் இருக்கிறார். அவர் ஆரபித்து வைத்த அயோக்கியத்தனம் இன்று ஆலமரமாக மக்களின் பயத்தில் செழிக்கிறது. அதனால்தான் பஞ்சகவ்யம் எனும் அவரின் மகாபெரிய உளறலை மையமாக வைத்து அவரை விமர்சிக்க வேண்டியுள்ளது.
நீங்கள் நம்மாழ்வாரை இதுநாள்வரை தூக்கி சுமந்திருக்கலாம். அவரை விமர்சிப்பதும், அவரை வைத்து அயோக்கியத்தனம் செய்யும் ஆட்களின் தொழிலைக் கெடுப்பதும் உங்கள் ஈகோவை சீண்டலாம். ஆனால் அதில் நியாயம் உள்ளதை நீங்கள் உணரத்தான் வேண்டும். பஞ்சகவ்யம் குடி என்ற அவரின் உளறலை 'பிடிக்கவில்லை என்றால் அதைமட்டும் விட்டுவிடுங்கள்' என எளிதாக கடக்க முடியாது. "டெய்லி இந்த மாத்திரை சாப்பிடுங்க அப்படியே கொஞ்சம் மலமும் சாப்பிடுங்கள்" என ஒரு டாக்டர் சொன்னால் அவரிடம் மருத்துவம் பார்ப்பீர்களா?
சாணியை திங்கச் சொல்லும் ஆள் கண்டிப்பாக ஒன்று மகா முட்டாளாக இருக்கவேண்டும். அல்லது ஃப்ராடாக இருக்க வேண்டும். அல்லது மனநோயாளியாக இருக்க வேண்டும். நம்மாழ்வாருக்கு இந்த மூன்றில் ஏதாவதொன்றை உங்கள் ஈகோ அதிகம் காயம்படாத அளவில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதைவிடுத்து உண்மையை சொல்லும் ஆட்களை எல்லாம் பொறுக்கிகள் என திட்டுவதும், நம்மாழ்வாரை கடவுளாக புனிதப்படுத்துவதும் அந்த ஆளைப் போல நம்மாழ்வாரின் அடிப்பொடிகளும் மனவியாதி உடையவர்கள் என்பதையே காட்டுகிறது. முடிந்தால் ஆர்கானிக் பொய்களை விஞ்ஞானபூர்வமாக நிரூபியுங்கள். அல்லது பஞ்சகவ்யம் குடித்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள். நன்றி.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக