சனி, 17 ஜூன், 2017

உபியில் முஸ்லிம் பெண்கள் பாஜகவுக்கு ஒட்டு போட்டனர்? தலாக் செய்த மாயம்? Triple talaq-hit women voted for BJP


prakash.jp. அதிதீவிர முஸ்லீம் ஆண்கள் சிந்திக்கவேண்டும்..
தலாக் விஷயத்தை பேசியே, 50% முஸ்லிம்கள் ஓட்டுகளை, அதாவது முஸ்லிம் பெண்களின் ஓட்டுக்களை உபியில் பிஜேபி பெற்றதை, முஸ்லீம் ஆண்கள் மறக்க வேண்டாம்... வரும் காலத்தில், இந்த பர்தாவை வைத்து, முஸ்லீம் பெண்களின் ஓட்டுகளை பெற, பிஜேபி திட்டமிடலாம்.... இதில் முஸ்லீம் பெண்களின் கருத்துத்தான் முக்கியம்... பொதுவெளியில் எதுவேண்டுமானாலும் செல்லலாம், ஆனால், ரகசியமான வாக்குப்பதிவில், பெண்களின் விருப்பமே வெளிப்படும்...
பெண்களுக்கு சமவாய்ப்பு, ஓட்டுரிமை இல்லாதவரையில், அனைத்து மதங்களிலும் ஆண்களின் எதோச்சையா அதிகாரம்மே இருந்தது... அதுதான் சதி, பொட்டுக்கட்டுதல், குழந்தை திருமணம், பலதாரமணம், பெண் கல்வி மறுப்பு, சொத்து மறுப்பு என பல விதங்களில் வெளிப்பட்டது.. இஸ்லாமிய கிருஸ்துவ மதங்களிலும் பெண்ணடிமைத்தனம் பல உண்டு... காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.. பெண் பாதிரியார்கள் கூட கிருஸ்துவ மதத்தில் இப்போது வந்துவிட்டார்கள்... இன்னும் சில மாற்றமடையாமல் உள்ளன.. அவைகளும் காலப்போக்கில் மாறியே தீரும்... யாராலும் தடுக்கமுடியாது....
எல்லா நிறுவப்பட்ட மதங்களிலும் உள்ள குறைகளை விமர்சிக்கும் முற்போக்குவாதிகளை, மாற்றுமத தீவிரவாதிகள் என பேசவேண்டாம்.. அடக்குமுறைக்கு, புறக்கணிப்புக்கு உள்ளாகும் எந்த மதத்து மக்களுக்காகவும் முன்னிற்கப்போவது, குரல்கொடுக்கப்போவது அவர்கள்தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக